முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி ஆணையத்தை கடந்த 9 ஆண்டுகளாக கூட்டாதது ஏன்?

திங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஆக.- 14 - கடந்த 9 ஆண்டு காலமாக காவிரி நிதி நீர் ஆணையத்தை கூட்டதாதது என்று மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு கேள்வி எழுப்பியதோடு கண்டனமும் தெரிவித்துள்ளது. கர்நாடகம், கேரள ஆகிய மாநிலங்களின் வடிகால் பகுதியாக தமிழகம் இருக்கிறது. கர்நாடகத்திற்கும் தமிழகத்திற்கும் கடந்த 1925-ம் ஆண்டு காவிரி நதிநீர் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தை ஒவ்வொரு 25 வருடத்திற்கும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அதாவது கடந்த 1975-ம் ஆண்டு காவிரி நதிநீர் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி இதை கண்டுகொள்ளவே இல்லை. அதோடு மட்டுமல்லாது காவிரியின் குறுக்கே அணைகளை கர்நாடகம் கட்டியபோது அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதனால் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே காவிரி பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. இதனையொட்டி அப்போது மத்தியில் பிரதமராக இருந்த வி.பி.சிங், காவிரி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தார். நடுவர் மன்றமானது பல ஆண்டுகள் விசாரணை நடத்தி இறுதியில் தமிழகத்திற்கு வருடந்தோறும் 209 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று இடைக்கால தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை இறுதி செய்யும்படி மத்திய அரசு கெஜட்டில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி வந்தார். தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டில் திறந்துவிடப்பட வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை. அதனால் தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிக்கு பாசனத்திற்கான மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. கோடை காலத்தில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட வேண்டும். ஆனால் தமிழகத்திற்கான காவிரி நீரை திறந்துவிடாமல் அதனை கர்நாடக அரசே தனது மாநிலத்திற்காக பயன்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்ட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடிதம் அனுப்பி இருந்தார். அதன் பின்னர் சுப்ரீம்கோர்ட்டிலும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலேயே இருந்தது. இதனை தமிழக அரசு தரப்பு வக்கீல்கள் சுப்ரீம்கோர்ட்டில் சுட்டிக்காட்டினர். இதனையடுத்து வரும் 17-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சுப்ரீம்கோர்ட்டு கூறியிருந்தது. இந்தநிலையில் வழக்கு விசாரணை நேற்று நடைபெறும் என்று கடந்த சனிக்கிழமை அன்று தெரிவித்திருந்தது. தமிழகத்தின் மனு மீது நேற்று விசாரணை நடந்தது. இந்த வழக்கின் விசாரணைக்கு மத்திய அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய சுப்ரீம்கோர்ட்டு கடந்த 9 ஆண்டுகளாக ஏன் காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்டவில்லை என்று கேள்வியும் எழுப்பியது. மேலும் காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக செயல்படுகிறது என்றும் சுப்ரீம்கோர்ட்டு காட்டமாக சுட்டிக்காட்டியது. தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் மீது கர்நாடக மாநில அரசு, மத்திய அரசு ஆகியவைகள் 10 நாட்களுக்குள் பதில் அளித்திடவும் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை செப்டம்பர் 3-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago