முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் டெசோ மாநாட்டுக்கு எதிர்ப்பு கருணாநிதி உருவபொம்மை எரிப்பு

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2012      உலகம்
Image Unavailable

கொழும்பு, ஆக.- 14 - இலங்கையில் சென்னையில் நடந்த டெசோ மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்களர்கள் கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஈழத் தமிழர் வாழ்வுரிமைகளைப் பாதுகாப்பதற்காக சென்னையில் தி.மு.க. ஏற்பாட்டில் டெசோ மாநாடு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கைத் தலைநகர் கொழும்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி உருவபொம்மை எரித்து சிங்களர்கள் போராட்டம் நடத்தினர்.கொழும்பில் இந்திய தூதரின் இல்லத்துக்கு முன்பாக தேசிய இயக்கங்களின் ஒன்றியம் என்ற பெயரில் சிங்களர்கள் நேற்று மாலை ஒன்று திரண்டு இந்திய அரசுக்கு எதிராகவும் தமிழீழத்துக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இந்த இனவெறி போராட்டதுக்கு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசிங்க தலைமை வகித்து பேசியதாவது, இலங்கை விவகாரங்களில் அநாகரிகமான முறையில் இந்தியா தலையிட்டு உள்நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. டெசோவை கருணாநிதி மீண்டும் கூட்டி இலங்கையில் தமிழீழத்தை அமைக்கப் போவதாக கூறுகிறார். இது அவர் காணும் பகல் கனவு என்பதை தமிழகமும் மத்திய அரசும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியும் இரத்த வெறி பிடித்தவர்கள். இவர்களுக்கு தமிழீழம் வேண்டுமென்றால் இந்தியாவில் அமைத்துக் கொள்ளட்டும். இலங்கையில் அதற்கான அனுமதியை ஒருபோதும் வழங்க முடியாது. மத்திய அரசின் ஊக்குவிப்பிலேயே கருணாநிதி டெசோவை நடத்துகின்றார். பிரதமர் மன்மோகன்சிங் ஒன்றுமே தெரியாது போன்று நடிக்கிறார். மீண்டும் இலங்கையில் ரத்த ஆறு ஓடுவதற்கு இந்தியா செயல்படக் கூடாது. தமிழர்களுக்கு 13 -வது திருத்தச் சட்டத்தை அரசியலமைப்பிலிருந்து நீக்குவதற்கு மகிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது அரசியலமைப்புக்குள் பலவந்தமாக திணிக்கப்பட்ட இந்தியாவின் பிரிவினைவாத கொள்கைகளை முதலில் நீக்க வேண்டும் என்றார். அதன் பின்னர் ஆண்களும் பெண்களுமாக ஒன்று திரண்ட சிங்களர்கள், தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரது உருவ பொம்மைகளை தீ வைத்துக் கொளுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்