முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜகஸ்தானில் அதிபர் தேர்தல்

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

 

அஸ்தானா, ஏப்.- 5 - கஜகஸ்தானில் அதிபர் தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இத்தேர்தலில் தற்போதைய அதிபர் நூர்கல்தான் நஸர்பயேல் மீண்டும் போட்டியிடுகிறார். அதிபரை எதிர்த்து 3 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மேற்கத்திய நாடுகளின் விமர்சனங்களுக்கு இடையே நடைபெறும் இத்தேர்தல் சம்பிரதாயமான ஒன்றாகவே கருதப்படுகிறது. மேற்காசியாவில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் சமீப காலத்தில் நடைபெற்ற புரட்சியின் மூலம் ஆட்சியாளர்கள் அகற்றப்பட்ட நிலையில் கஜகஸ்தானில் மக்களிடம் எவ்வித எதிர்ப்புமின்றி அதிபர் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 

இத்தேர்தலில் நஸர்பயேல் வெற்று பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய அதிபரின் ஆட்சியில் கஜகஸ்தான் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தேர்தல் பற்றி பிரதமர் கரீம் மாசிமோவ் கூறுகையில், அதிபர் நஸர்பயேல் மேற்கத்திய ஜனநாயக முறைக்கு மாறுவதற்கு மக்களின் ஆதரவை கோர முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்