முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவிளையாடல் படத்தை டிஜிட்டலுக்கு மாற்றதடை ஐகோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2012      சினிமா
Image Unavailable

சென்னை, ஆக.- 14 - டிஜிட்டல் முறையில் திருவிளையாடல் படத்தை மாற்றி அமைக்க  ஐகோர்ட் தடைவிதித்துள்ளது. மயிலாடுதுறையை சேர்ந்த விஜயா பிக்சர்ஸ் உரிமையாளர் ஜி.விஜயா சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:- சிவாஜி கணேசன் நடித்த திருவிளையாடல் படத்தின் நெகடிவ் உரிமை என்னிடம் உள்ளது. அண்மையில் கர்ணன் படத்தை டிஜிட்டல் முறையில் மாற்றியமைத்து வெளியிட்டனர். இது மாபெரும் வெற்றி அடைந்தது. இதை தொடர்ந்து திருவிளையாடல் படத்தையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றி வெளியிட விஜயலட்சுமி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக விளம்பரமும் வெளியிட்டுள்ளனர். இது சட்டவிரோதமானது. எனது உரிமையை பறிப்பதாக உள்ளது. டிஜிட்டல் முறையில் திருவிளையாடல் படத்தை மாற்றி அமைக்க விஜயலட்சுமி பிக்சர்ஸ்க்கும், ஜெமினி கலர் லேப் நிறுவனத்துக்கும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு விஜயா தனது மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை நீnullதிபதி சுப்பையா விசாரித்து திருவிளையாடல் படத்தை டிஜிட்டல் முறைக்கு மாற்ற ஜெமினி கலர் லேபுக்கும், விஜயலட்சுமி பிக்சர்ஸ்க்கும் தடைவிதித்தார். இரண்டு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மனுதாரர் சார்பாக மூத்த வக்கீல் கே.துரைசாமி ஆஜரானார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்