முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோட்டையில் ஜெயலலிதா தேசிய கொடியேற்றி சுதந்திரதின உரையாற்றுகிறார்

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.- 15 - 65-வது சுதந்திர தினம் இன்று  கோலாகலமாக நடக்கிறது. இதை முன்னிட்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 18 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாட்டின் 65வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங்கும், அந்தந்த மாநில தலைநகரங்களில் முதல்வர்களும் இன்று   தேசிய கொடியேற்றுகின்றனர். 

சென்னை தலைமை செயலக கோட்டை முகப்பு கொடி மரத்தில் முதல்​ அமைச்சர் ஜெயலலிதா இன்று  காலை 9.30 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். இதற்காக கோட்டை கொத்தளம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்கள் அணிவகுப்புடன் முதல்​அமைச்சர் ஜெயலலிதா காலை 9.25 மணிக்கு கோட்டை கொத்தளத்துக்கு வருகிறார். விழாவுக்கு வரும் முதல்வர் ஜெயலலிதாவை, போர் நினைவு சின்னம் அருகில் இருந்து போலீசார் அணிவகுத்து அழைத்து செல்கின்றனர். அதன்பின் உள்துறை செயலர் ராஜகோபால், டிஜிபி ராமானுஜம், சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜார்ஜ் ஆகியோரை தலைமை செயலர் தேபேந்திரநாத் சாரங்கி அறிமுகம் செய்து வைப்பார். பின்னர் திறந்த ஜீப்பில் ஏறி முதல்​அமைச்சர் ஜெயலலிதா போலீசாரின் அணிவகுப்பை பார்வையிடுகிறார். ரோட்டின் இருபுறமும் கூடி நிற்கும் பொது மக்களுக்கும் வணக்கம் தெரிவிக்கிறார். அதன் பிறகு கோட்டை கொத்தளத்திற்கு சென்று தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். அதன்பின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளையும் வழங்குகிறார். உள்ளாட்சி அமைப்பில் சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை தேர்ந்தெடுத்து முதல் 3 பரிசுகளும், விருதுகளும் முதல்​அமைச்சர் ஜெயலலிதா வழங்குகிறார். சிறந்த சமூக சேவகர்களுக்கும் விருது வழங்கப்படுகிறது. விழாவில் உடல் ஊனமுற்றோர் மற்றும் மாணவ​மாணவிகளுக்கும் இனிப்பு வழங்கி சுதந்திர தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கிறார். சுதந்திர தின விழா பிரம்மாண்டமாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கோட்டை கொத்தளம் வெள்ளையடிக்கப்பட்டு புத்தம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. கோட்டைக்கு எதிரே அமைச்சர்கள், அதிகாரிகள், சிறப்பு அழைப்பாளர்கள், பொதுமக்கள் அமர பந்தல் போடப்பட்டுள்ளது. கொடி ஏற்று நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக பெரிய தொலைக்காட்சி பெட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன. சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என மாநில அரசுகளை மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது.  தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் கோட்டை கொத்தளத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதையடுத்து தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை கோ வை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 18 ஆயிரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரயில், பஸ், விமான நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள், முக்கிய வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தவிர தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படையில் மோப்ப நாய் பிரிவு, வெடிகுண்டு அகற்றும் பிரிவு போலீசாரும் தயார் நிலையில் உள்ளனர். ரயில் தண்டவாளங்கள், ரயில்வே பாலங்கள், ரயில் நிலைய கட்டிடங்கள் ஆகியவற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்களில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து ரோந்து பணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில், விமான பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றனர். மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த கலெக்டர்கள் தேசிய கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கின்றனர். அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்களிலும் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்