முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜமாத் இ இஸ்லாமி அமைப்புடன் இடது கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொடர்பா?-காங்கிரஸ்

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

கொச்சி, ஏப்.- 5 - கேரளாவில் சட்டமன்ற தேர்தலுக்காக ஜமாத் இ இஸ்லாமி என்ற அமைப்புடன் இடது கம்யூனிஸ்ட் கட்சி ரகசிய உடன்பாடு வைத்துக்கொண்டு உள்ளதா என்பதற்கு அக்கட்சி விளக்க மளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  கேரளாவில் வருகிற 13 ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறுது. இந்த தேர்தலில் இடதுசாரி கம்யூனிஸ்ட் தலைமையில் இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணியும் தனித்தனி கூட்டணிகளாக போட்டியிடுகின்றன. இந்த நிலையில் ஜமாத் இ இஸ்லாமி என்ற அமைப்புடன் இடது கம்யூனிஸ்ட் கட்சி ரகசிய தேர்தல் உடன்பாடு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இடது கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பினராயி விஜயன் சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் இடது கம்யூனிஸ்ட் கட்சி ஜமாத் இ இஸ்லாமி அமைப்புடன் ரகசிய தேர்தல் உடன்பாடு வைத்திருக்கிறது என்று கேரள பிரதேச  காங்கிரஸ்  கட்சியின் தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றம் சாட்டியுள்ளார். தங்களுக்கு தோல்வி ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில்தான் அந்த அமைப்புடன் இடது கம்யூனிஸ்ட் கட்சி உடன்பாடு வைத்துக்கொண்டுள்ளது என்று சென்னிதலா கூறினார். 

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றிபெற்றால் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பி.கே.குஞ்சாலிக்குட்டிக்கு துணை முதல்வர் பதவியை காங்கிரஸ் கட்சி கொடுக்கும் என்று இடது கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கூறிவருகிறார்களே என்று கேட்டதற்கு இது ஆதாரமற்றது என்று சென்னிதலா கூறினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியில் இருந்து அப்படி ஒரு கோரிக்கை எதுவும் வைக்கப்படவில்லை என்று சென்னிதலா கூறினார். ஜமாத் இ இஸ்லாமி அமைப்புடன் தங்களுக்கு ரகசிய உடன்பாடு எதுவும் இருக்கிறதா என்பது குறித்து மாநில இடது கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பினராயி விஜயன் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சென்னிதலா கேட்டுக்கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்