முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்காசி இந்தியன்வங்கி ஏடிஎம்​-ல் 1000ரூபாய் கள்ளநோட்டு பரபரப்பு

புதன்கிழமை, 15 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

தென்காசி. ஆக. - 15 - தென்காசி இந்தியன் வங்கி ஏடிஎம் ல் நேற்று ஒரு பெண் எடுத்த பணத்தில் ஆயிரம் ரூபாய் நோட்டு கள்ள நோட்டு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குற்றாலம் அருகே உள்ள வாஞ்சிநகர் பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி தேவர் இவரது மனைவி
அன்னத்தாய் (வயது 60) இவர் நேற்று தென்காசி இந்தியன் வங்கி ஏடிஎம் ல் ரூபாய் 25 ஆயிரம் எடுத்துள்ளார். அதன்பின் அந்த பணத்தை அதே இந்தியன் வங்கியில் வேறு ஒரு கணக்கில்
செலுத்தியுள்ளார். அப்போது அந்த பணத்தை பெற்றுக்கொண்ட இந்தியன் வங்கி அலுவலர் அன்னத்தாயிடம் வாங்கிய ரூபாய் நோட்டுக்களை எண்ணிப்பார்த்துள்ளார். அப்போது அன்னத்தாய்
கொடுத்த ரூபாய் நோட்டுகளில் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு கள்ளநோட்டு இருந்துள்ளது. இதைப்பார்த்த வங்கி அலுவலர் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டை இரண்டாக கிழித்து அன்னத்தாயிடம் இது கள்ள நோட்டு எனவே கிழித்துவிட்டேன் நீங்கள் இதற்கு பதிலாக வேறு ரூபாய்
கொடுங்கள் என்று கூறியுள்ளார். இதை கேட்டு அன்னத்தாய் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் அந்த வங்கி அலுவலரிடம் இந்த ரூபாய் நோட்டு இதே வங்கியில் உள்ள ஏடிஎம் ல் தான் எடுத்தேன எனவே இது கள்ளநோட்டு என்றால் நீங்கள் தான் பொறுப்பு எனக்கு வேறு ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் வங்கியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்த பெண் இந்தியன் வங்கி மேலாளரை சந்தித்து நடந்தவற்றை விளக்கியுள்ளார். இதை கேட்ட இந்தியன் வங்கியின் மேலாளரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார். அப்போது அந்த பெண் இந்த பணத்தை இதே வங்கியில் உள்ள ஏடிஎம் ல் தான் எடுத்தேன் . எனவே இது கள்ளநோட்டு என்றால் அதற்கு நான் பொறுப்பு அல்ல. அதற்கு நீங்கள் தான் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். என்று கூறினார். எனவே வேறு வழியில்லாமல் வங்கியின் மேலாளர் அந்த பெண்ணை சமாதானம் செய்து மாலை 3 மணிக்கு வாருங்கள் என்று கூறியுள்ளார். அதன்பின் வங்கியின் மேலாளர் ஏடிஎம் ல் உள்ள கேமராவில் ஆய்வு செய்துள்ளார். அப்போது அந்த பெண் ஏடிஎம் ல் ரூபாய் 25 ஆயிரம் எடுத்துள்ளது மற்றும் அந்த பணத்தை ஏடிஎம் மையத்திற்குள் வைத்து எண்ணியது எல்லாம் அந்த கேமராவில் பதிவாகியிருந்தது. எனவே அந்த பெண் கூறியது எல்லாம் உண்மை என்று நம்பினார். அதன்பின் மாலை 3 மணிக்கு அன்னத்தாய் மீண்டும் வங்கி மேலாளரை சந்தித்தார் அப்போது வங்கியின் மேலாளர் அன்னத்தாயிடம் வேறு ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். இதனால் அன்னத்தாய் நிம்மதி அடைந்தாலும் மற்ற வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு அந்த வங்கியின் ஏடிஎம் ல்  இருந்து என்றால் அந்த கள்ள நோட்டு எப்படி வந்தது. அதனை வங்கியில் செலுத்தியவர்கள் யார்? அந்த பணத்தை யாரோ ஒருவர் வங்கியில் செலுத்தினார் என்றால் அந்த வங்கியின் அலுவலர் அந்த கள்ளநோட்டை எப்படி சோதிக்காமல் வாங்கினார். என்பன போன்ற கேள்விகளுக்கு வங்கி நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும் என்றும் தென்காசி இந்தியன் வங்கியின் வாடிக்கையாளர்களும்
பொது மக்களும் விரும்புகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்