முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாமில் சட்டசபை தேர்தல் உல்பா அமைப்பு புறக்கணிப்பு

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

சிப்சாகர்,ஏப்.- 5 - அசாமில் நேற்று சட்டசபைக்கு முதல் கட்டமாக நடைபெற்ற தேர்தலை உல்பா தீவிரவாதிகள் புறக்கணித்தனர். அதேசமயத்தில் தேர்தலின்போது அவர்கள் எந்தவித இடையூறும் செய்யவில்லை. அசாம் மாநிலத்தில் நேற்று முதல் கட்டமாக 62 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதியில் உல்பா இயக்கத்தை சேர்ந்த யாரும் ஓட்டுப்போடவில்லை. மேலும் ஓட்டுப்பதிவின்போது அவர்கள் எந்தவித இடையூறும் செய்யவில்லை. ஓட்டுப்பதிவை புறக்கணிப்போம் என்று நாங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளோம் என்று உல்பா அமைப்பின் துணைத்தலைவர் பிரதீப் கோகாய் நேற்று சிப்காரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். தேர்தலின் போது நடுநிலை வகிப்போம் என்றும் அவர் கூறினார். தேர்தலில் ஓட்டுப்போட வேண்டுமா என்ற கேள்வியை எழவில்லை. மக்கள் ஓட்டுப்போடட்டும். இது அவர்களுடைய கடமையாகும் என்றும் கோகாய் தெரிவித்தார். அசாமில் பல சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் வரை உல்பா அமைப்பை சேர்ந்தவர்கள் தேர்தலை புறக்கணிப்பார்கள் என்று அமைப்பில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஜிதென் தத்தாவும் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்