முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல்லில் மாவட்ட கலெக்டர் தேசியக் கொடியேற்றினார்

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

திண்டுக்கல், ஆக.- 16 - திண்டுக்கல்லில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் ந.வெங்கடாசலம் தேசியக்கொடியேற்றி வைத்து ரூ.45 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மாவட்ட கலெக்டர் ந.வெங்கடாசலம் தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெண்புறாக்கள் மற்றும் வண்ண பலூன்களை பறக்க விட்டார். அதனைத்தொடர்ந்து ஆயுதப்படை அலங்கார அணி வகுப்பை பார்வையிட்டார். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். நாட்டின் விடுதலைக்காக அரும்பாடு பட்ட தியாகிகளை கெளரவிக்கும் விதமாக அவர்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் சென்று பொன்னாடை அணிவித்து மாவட்ட கலெக்டர் கெளரவித்தார். விழாவில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து 103 பயனாளிகளுக்கு ரூ.45.02 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவை சிறப்பிக்கும் விதமாக பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அதில் பங்கேற்ற 910 மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசு மற்றும் கேடயத்தை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட  நீதிபதி பாலசுந்திரகுமார், காவல்துறை துணைத்தலைவர் அறிவுச்செல்வன், மாவட்ட எஸ்.பி. ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் மனோகரன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்