முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியாவுக்கு சரப்ஜித்சிங் கடிதம்

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

அமிர்தசரஸ், ஆக. 17 - பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியரான சரப்ஜித் சிங் சிறையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதி உள்ளார். பாகிஸ்தானின் கோட் லக்பத்ராஜ் சிறையில் உள்ள சரப்ஜித்சிங் தனது வழக்கறிஞர் அவைஸ் ஷேக் மூலம் சோனியா காந்தி, தனது சகோதரி தல்பீர் கவுர் மற்றும் மகள் பூனம் ஆகியோருக்கு கடிதம் கொடுத்தனுப்பி உள்ளார். சோனியாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, 

சிறையில் சுகாதாரமில்லாத உணவை வழங்குகிறார்கள். எனக்கு வழங்கும் உணவில் தவறான பொருள் இருப்பதாக உணர்கிறேன். இதனால் எனது உடல்நிலை நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, எனது ஒரு காலில் வலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போதுமான மருத்துவ வசதிகளும் வழங்கப்படுவதில்லை. 

உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என பயமாக இருக்கிறது. மேலும் சிறை அதிகாரிகள் என்னை தரக்குறைவாக பேசுகிறார்கள். சிறையில் உள்ள என்னை பார்ப்பதற்காக பாகிஸ்தான் வருவதற்கு எனது சகோதரி மற்றும் மகளுக்கு விசா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 1990 ல் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சரப்ஜித்சிங்குக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. எனினும் வழிதவறி பாகிஸ்தான் எல்லைக்கு சென்ற தன்னை பாகிஸ்தான் கைது செய்து விட்டதாக கூறி வருகிறார் சரப்ஜித்சிங்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago