முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து மறு ஆய்வு

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. 17 - நாட்டின் பொருளாதார வேகம் குறைந்துள்ள நிலையில் வராக் கடன்கள் அதிகரித்துள்ள சூழ்நிலையில் பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகளை நாளை 18 ம் தேதி மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் மறு ஆய்வு செய்கிறார். பொதுத்துறை வங்கி தலைவர்களுடனான இந்த கூட்டத்தில் வராக் கடன்கள், விவசாய கடன்கள், அடிப்படை கட்டமைப்பு பிரிவுக்கான கடன்கள், மனிதவளம் குறித்த விவகாரங்கள் விவாதிக்கப்படும். இந்த கூட்டத்தில் நபார்டு, சிட்பி, என்.எச்.பி. ஐ.ஐ.எப்.சி.எல், எக்ஸிம் வங்கிகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். 

கடந்த 1 ம் தேதி நிதியமைச்சரா சிதம்பரம் பதவியேற்ற பிறகு பொதுத்துறை வங்கி தலைவர்களை சந்திப்பது இதுவே முதல் முறையாகும். 2011 - 12 ல் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 5.3 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இதுவே மிக குறைந்த வளர்ச்சி விகதமாகும். நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் - ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலாண்டு பகுதியில் தொழில்துறை வளர்ச்சி 0.1 சதவீதமாக குறைந்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கை மூலம் இந்த வளர்ச்சி விகிதம் குறைந்தது. இதை தொர்ந்து முதலீட்டையும் வளர்ச்சியையும் விரைவுபடுத்த குறைந்த வட்டி விகிதம் உதவும் என்று சிதம்பரம் கூறியிருந்தார். பொருளாதார மந்த நிலை காரணமாக கடன் பெற்றவர்கள் கடனை திருப்பி செலுத்துவதில் பாதிப்பு ஏற்பட்டது. 2011 - 12 ல் பொதுத்துறை வங்கிகளின் வராக் கடன் அளவு 3.3. சதவீதமாக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் 2.3 சதவீதமாக இது இருந்தது. நாட்டின் பல பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. இதுவும் கொடுக்கப்பட்ட கடன்கள் திரும்ப வராததற்கு காரணமாகும். பிரதமருக்கான பொருளாதார ஆலோசகனை கவுன்சில் தலைவர் ரங்கராஜன் இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாக இருக்கும் என்று சமீபத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்