முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகள் காணாமல் போனது குறித்து சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி. ஆக. 17 - நாட்டில் 55,000 குழந்தைகள்  காணாமல் போனது  குறித்து தொடரப்பட்ட பொது நலன் வழக்கில்  மத்திய அரசுக்கும் அனைத்து மாநில அரசுகளுக்கும் சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  குழந்தைகள் காணாமல் போனது  தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சர்வ மித்ரா என்ற வழக்கறிஞர் பொது நலன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நாட்டில் இதுவரை 55,000 குழந்தைகளை காணவில்லை என்றும் இந்த குழந்தைகளை இது வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் இநத குழந்தைகளை கண்டுபிடிக்க அல்லது அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை கண்டுபிடிக்க மத்திய மாநில அரசுகளை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில்  அவர்  கூறியுள்ளார்.

இந்த குழந்தைகள்  உடல் உறுப்புகளுக்காக கடத்தப்பட்டிருக்கலாம்.  அல்லது  பிச்சை எடுத்தல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காகவும், விபச்சார தொழிலில் ஈடுபடுத்துவதற்காககவும் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும்   அவர் அந்த மனுவில்  கூறியுள்ளார்.

ஒருவேளை இந்த குழந்தைகள்  கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும்  உடல் உறுப்புக்களை எடுத்த பிறகு இந்த குழந்தைகளின் சடலங்கள் மறைக்கப்பட்டிருக்கலாம் என்றும்  மனுதாரர்  தனது மனுவில்  கூறியுள்ளார்.

காணாமல் போன இந்த குழந்தைகள் குறித்தும்  குழந்தைகள்  காணாமல் போவதை தடுப்பது குறித்தும் உரிய நடவடிக்ககைகளை எடுக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும்  அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு மீது  சுப்ரீம் கோர்ட்டு  நீதிபதி அப்தாப்  ஆலம்  தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரணை நடத்தியது. 

மனுதாரரின் வாதங்களை ஏற்றுக்கொண்ட  நீதிபதிகள் இந்த மனுவை விசாரணைக்கும் எற்றுக்கொண்டனர்.

இந்த மனு மீதான  தங்களது பதில் மனுவை  தாக்கல் செய்யும்படி மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கு  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்