முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதக்கம் வென்ற விஜயகுமாருக்கு பதவி உயர்வு

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக. 17 - லண்டன் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடு ம் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராணுவ வீரர் விஜயகுமாருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இந்திய ராணுவ தளபதியான பிக்ரம் சிங் இந்த பதவி உயர்வை அளித்தார். விஜயகுமார் பயிற்சி அதிகாரியாக(சுபேதார் மேஜர்) அறிவிக்கப்பட்டு இருக்கிறார். டெல்லியில் நடந்த விழா வில் இந்த அறிவிப்பு வெளியானது. 

மேலும் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற விஜயகுமார் அதிகாரியாக அனைத்து உதவிகளையும் ராணுவம் அளிக்கும் என்றும் பிக்ரம் சிங் தெரிவித்தார். 

விஜயகுமார் சுபேதார் மேஜராக ஆன உடன் இந்த அறிவிப்பை ராணுவ தளப தி பிக்ரம் சிங் உடனடியாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த பதவி உயர்வு(அதிகாரி பதவி) ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் அளிக்க ப்பட்டு உள்ளது. இதில் சில விதி முறைகளையும் பின்பற்ற வேண்டி உள்ளது. குமார் அதிகாரியாக செயல்பட நாங் கள் அனைத்து உதவிகளையும் செய்வோம். அவர் ஆங்கிலத்தில் பேசுகிறார். நன்கு படித்திருக்கிறார். அதிகாரி யாக அனைத்து தகுதிகளும் உள்ளன. அவரது திறமைகளை மேலும் பலப்படு த்தி அவரை திறன் மிக்க அதிகாரியாக மாற்றுவோம் (கமிஷன்டு ஆபிசர்) என் றும் சிங் தெரிவித்தார். 

லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்ற 14 ராணுவ வீரர்களுக்கு டெல்லியில் பா ராட்டு விழா நடந்தது. இந்த விழாவின் போது நிருபர்களைச் சந்தித்த தளபதி மேற்கண்டவாறு கூறினார். 

தற்போதைய விதிமுறைகளின்படி துப் பாக்கி சுடும் வீரரான விஜயகுமாருக்கு இரண்டு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது என்றும் சிங் நிருபர்களிடம் தெ ரிவித்தார். 

உங்களுக்கு நீதி கிடைத்துள்ளதா என்று விஜயகுமாரிடம்கேட்ட போது, எனக் கு நீதி கிடைத்துள்ளது. சுபேதார் மேஜ ராக பதவி உயர்வும், ரூ. 30 லட்சம் பரி சும் கிடைத்துள்ளது என்றார் அவர். 

மேலும், கடந்த 4 வருடகாலமாக நான் ஊக்கப் பணத்திற்காக காத்திருந்தேன். கடந்த வருடமே நான் பதவி உயர்வை எதிர்பார்த்தேன் . அது இப்போது கிடை த்துள்ளது என்றும் அவர் தெரிவி த்தார். 

ராணுவத்தில் இருந்து விலகப் போவ தாக கூறப்படுவது குறித்து அவரிடம் கேட்ட போது, நான் அவ்வாறு கூறவி ல்லை. சில மீடியாக்கள் எனது பேச்சை தவறுதலாக வெளியிட்டு உள்ளன என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்