முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுடன் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்த விருப்பம்

வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், ஆக. 17 - இந்தியா, அமெரிக்க பாதுகாப்பு உறவுகளை ஒரு புதிய கட்டத்துக்கு கொண்டு செல்ல தான் விரும்புவதாக அமெரிக்காவின் மூத்த ராணுவ தளபதி சாமுவேல் ஜே லாக்லியர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய கடற்படை தளபதியான அவர், வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது, அமைதிக்காகவும், செழுமைக்காகவும் இந்தியாவுடன் தோழமையுடன் செயல்பட நாங்கள் விரும்புகிறோம். இந்திய அமெரிக்க பாதுகாப்பு உறவுகளை ஒரு புதிய கட்டத்துக்கு கொண்டு செல்ல நான் விரும்புகிறேன். உத்திசார்ந்த வழிகாட்டுதல் மற்றும் முதலீடுகள் ஆகியவற்றால் அப்பிராந்தியத்தின் பொருளாதார சக்தி மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாவலன் என்ற முறையில் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கப்படும். 

இந்த இலக்குகளை அடைவதற்காக இந்திய அமெரிக்க உத்திசார்ந்த தோழமை தொடர்பாக எனக்கு ஆலோசனை வழங்குவதற்காக 6 ராணுவ மற்றும் ராணுவம் சாராத நிபுணர்கள் அடங்கிய குழுவை நான் அமைத்துள்ளேன். இந்த குழுவின் தலைவராக கர்னல் மைக்கேல் அல்பனிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த அரை நூற்றாண்டு காலமாக அணிசேரா அமைப்பின் தலைவராக இந்தியா விளங்கி வருகிறது என்று சாமுவேல் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்