முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புதுப்பிப்பு

வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை, ஆக.17 - மதுரை மாநகராட்சியின் மூலம் திருமலை நாயக்கர் மகால், மீனாட்சி அம்மன் கோயில், பெரியார் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் ரூ.2.13 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா, ஆணையாளர் இரா.நந்தகோபால் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

   மதுரை மாநகராட்சியின் மூலம் திருமலை நாயக்கர் மகால் முன்புள்ள துளசிராம் பூங்கா ரூ.20 லட்சம் மதிப்பீல் மெகா சுற்றுலா திட்டத்தின் கீழ் இந்திய அரசு சுற்றுலாத்துறை நிதி உதவியுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. திருமலை நாயக்கர் மகாலைச் சுற்றி உள்ள பூங்கா ரூ.84 லட்சம் மதிப்பில் தமிழ்நாடு மாநில சுற்றுலா கழகத்தின் நிதி உதவியுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் திருக்கோவில் அருகில் உள்ள மீனாட்சி பூங்கா ரூ.34 லட்சம் மதிப்பில் மெகா சுற்றுலா திட்டத்தின் கீழ் இந்திய அரசு சுற்றுலாத் துறை நிதி உதவியுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும்  பெரியார் பஸ் நிலையத்தில் உள்ள மதுரை மெற்கு நுழைவு வாயில் கோட்டைச் சுவரை அழகுபடுத்துதல் பணி ரூ.75 லட்சம் மதிப்பில் மெகா சுற்றுலா திட்டத்தின் கீழ் இந்திய அரசு சுற்றுலாத் துறை நிதி உதவியுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு  கொண்டு வருவது தொடர்பாக ஆய்வு  செய்தனர். மதுரை கோச்சடைப் பகுதியில் உள்ள மாநகராட்சி லாரி நிறுத்துமிடத்தில் ஆய்வு  மேற்கொண்டனர்.

 இந்த ஆய்வின் போது துணை மேயர் ஆர்.கோபாலகிருஷ்ணன், மண்டலத் தலைவர்கள் சாலைமுத்து, ராஜபாண்டியன், மாமன்ற உறுப்பினர்கள் அமுதா, கார்த்திகை ஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்