முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோர்ட்டு அவமதிப்பு: கொல்கத்தா ஐகோர்ட்டு மறுப்பு

வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா.ஆக. 17 - மேற்கு வங்க சட்டசபையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு  நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி , பணத்திற்காக கோர்ட்டுகளில் தீர்ப்புகள் சொல்லப்படுகின்றன என்று நீதித்துறையை இடித்த  பேசியுள்ளார். இதற்கு பல்வேறு நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் கடும்  கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மம்தாவின் இந்த பேச்சு கோர்ட்டு அவமதிப்பு ஆகும் என்று சிலர் கொல்கத்தா ஐகோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீது கொல்கத்தா ஐகோர்ட்டு  நீதிபதிகல்  ஜே.என். பட்டேல், ஜோய்மல்யோ மக்சி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரணை நடத்தியது.

மம்தாவின் இந்த கருத்து  அவரது சொந்த கருத்து என்றும் இதனால் கோர்ட்டு  கலக்கமடையவில்லை என்றும்  நீதிபதிகள் கூறினர்.

இது தொடர்பாக வக்கீல்கள் மனு ஏதேனும் செய்ய விரும்பினால் அவர்கள் தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள்  கூறினர்.

எனவே மம்தா மீது தானாக  முன்வந்து ஐகோர்ட்டு வழக்கு எதையும் தொடராது என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்