முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பிரதேசத்தில் மழை - வெள்ளம்பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

போபால், ஆக.- 18 - மத்திய பிரதேச மாநிலத்தில்  கன மழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு நிவாரண உதவிகளை செய்து வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். இவர்கள் அருகில் உள்ள நிவாரண முகாம்களில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை - வெள்ளத்திற்கு  இம்மாநிலத்தின் ஹொசாங்காபாத் மாவட்டத்தில்  8 பேரும் , போபால் நகரில் 6 பேரும், உஜ்ஜயின், தீவாஸ் மாவட்டங்களில்  தலா 3 பேரும் என 3 மாவட்டங்களில் தலா 2 பேரும்,  நான்கு மாவட்டங்களில் தலா ஒருவரும் பலியானதாக அரசு தகவல்கள்  கூறுகின்றன. 319 கால்நடைகளும்  பலியாகியுள்ளன. 14,056 வீடுகள் சேதமடைந்துள்ளன. மாநிலத்தில் இதுவரை 675.9 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மத்திய பிரதேச அரசு நிவாரண  உதவிகளை அளித்து வருகிறது.  தேவைக்கு ஏற்ப மேலும் நிவாரண உதவிகளையும் அளித்து வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்