முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு மாநிலங்களை பற்றிவதந்தி கிளப்பியர்கள் மீதுநடவடிக்கை எடுக்கபிரதமர் வேண்டுகோள்

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.- 18 - வடகிழக்கு மாநிலங்களை பற்றி வதந்திகளை கிளப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் மீது  வழக்குகள் பதிவு செய்து அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். அஸ்ஸாம் மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 70க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த சம்பவத்தை அடுத்து நாட்டின் பிற பகுதிகளில் இருக்கும் வடகிழக்கு மாநிலத்தவர் மீது  தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்றும்  எனவே வடகிழக்கு மாநில மக்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்றும் செல்போன்கள் மூலமாக எஸ்.எம்.எஸ். தகவல்கள் பரவின. இதை அடுத்து பெங்களூர், ஐதராபாத்  உள்ளிட்ட பல நகரங்களில் வேலை பார்த்தும், படித்தும் வந்த வடகிழக்கு மாநில மக்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று கிடைத்த ரயில்களில் ஏறி தங்களது சொந்த ஊருக்கு  திரும்ப தொடங்கினர். இது குறித்து  மத்திய அரசு  மிகுந்த கவலை  அடைந்தது. வடகிழக்கு மாநில மக்கள் அதிகமாக வசிக்கும்  மாநிலங்களில் அவர்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும்படி மத்திய அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.  இந்த நிலையில்  வடகிழக்கு மாநிலங்களை பற்றி வதந்திகளை கிளப்பியவர்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து தண்டிக்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாராளுமன்றத்தின் ராஜ்ய சபையில் நேற்று வடகிழக்கு மாநிலங்கள் குறித்த பிரச்சினையை  எம்.பி.க்கள் கிளப்பினார்கள்.  இதை  அடுத்து கேள்வி நேரத்தை ரத்து செய்த  சபை  தலைவர் ஹமீது அன்சாரி இது குறித்த விவாதத்திற்கு  அனுமதி அளித்தார். அப்போது பிரதமர் மன்மோகன் சிங் ஒரு அறிக்கையை  சமர்ப்பித்தார். நாட்டில் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் இருந்தால் மட்டும் போதாது,  சமுதாய நல்லிணக்கமும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.வதந்திகளை பரப்பும் விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது  வழக்கு பதிவு செய்து  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அஸ்ஸாம் மாநிலத்தில் எது நடந்திருந்தாலும் கூட  அது பற்றி வதந்தி பரப்புவதை மன்னிக்கவே முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் எந்த பகுதியை  சேர்ந்த மக்களாக இருந்தாலும் கூட அவர்களுக்கு  பாதுகாப்பு உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நாட்டில் ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை பேணிக்காத்தால் மட்டும் போதாது வகுப்பு நல்லிணக்கமும் வேண்டும் என்றும் அவர்  கூறினார். வதந்திகளை பரப்புகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்படிப்பட்ட விஷமிகள் மீது வழக்குகள் பதிவு செய்து  அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். வடகிழக்கு மாநில மக்கள் இடையே பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் ஏனென்றால் அவர்கள் இந்த நாட்டை  சேர்ந்தவர்கள் என்றும்  மற்றவர்களுக்கு இருப்பதை போல அவர்களுக்கும் அந்த உரிமை இருக்கிறது என்றும் அவர்  கூறினார். நுட்பமான பிரச்சினைகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் சக்திகளை தடை செய்ய  வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்