முக்கிய செய்திகள்

கிராபிக்ஸ் செய்து மக்களை ஏமாற்றும் டி.வி.க்கள் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம்

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2011      தமிழகம்
premalatha

தருமபுரி,ஏப்.- 5 - தருமபுரி தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கரை ஆதரித்து தே.மு.தி.க. கட்சி தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பிரச்சாரம் செய்தார். 

தருமபுரி பேருந்து நிலையம் அருகே தே.மு.தி.க.வேட்பாளர் பாஸ்கர், பாப்பிரெட்டிபட்டி அதிமுக வேட்பாளர் பழனியப்பன் ஆகிய இருவரையும் பிரேமலதா விஜயகாந்த் அறிமுகம் செய்துவைத்து பேசினார். அப்போது அவர் தமிழகத்தில் கடுமையான விலைவாசி, மின்வெட்டு, ரவுடிகள் ராஜ்ஜியம், மணல் கொள்ளை, அரிசி கடத்தல்,ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆகியவற்றை பட்டியலிட்டார். மேலும் வரும் தேர்தல் மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்டும் நாளாக அமையும் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் இந்த தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான இந்த வெற்றி கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவித்தார். கருணாநிதிக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால்தான் தனது டி.வி. வீடியோ கிராபர்களை வைத்து கிராபிக்ஸ் காட்சிகளை தயாரித்து தருமபுரியில் வேட்பாளரை தாக்கியதாக பொய்க்காட்சிகளை வெளியிட்டு மக்களை நம்ப வைக்க முயலுகிறார் என கூறிய அவர் மேலும் தருமபுரியில் நடந்ததாக கூறும் காட்சிகளுக்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார். நல்லாட்சி அமைய அதிமுக-தேமுதிக கூட்டணிக்கு வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டார். தருமபுரி தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்ற பாமக மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டிய அவர் மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையான சிப்காட் தொழிற்சாலை அமைத்து இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்போம் என உறுதியளித்தார். இலவச கலர் டி.வி. கொடுத்து அதற்கு கேபிள் இணைப்பு மூலம் ரூ. 30 ஆயிரம் கோடி கொள்ளையடித்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: