முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரானைட் அதிபர்களின் பாஸ்போர்ட்டை முடக்க தமிழகஅரசு நடவடிக்கை

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஆக.- 18 - கிானைட் அதிபர்களின் பாஸ்போர்ட்  மற்றும் வங்கி கணக்குகளை முடக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவத”க மதுரை ஐகோர்ட் கிளையில் அரசு வழக்கறிஞர் ஜெனரல் நேற்று தெரிவித்தார்மதுரை மாவட்டத்தில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். இந்த முறைகேடுகளை ஆய்வு செய்வதற்காக மதுரை மாவட்ட கலெக்டர் 18 குழுக்களை அமைத்தார். கடந்த 2ம் தேதியிலிருந்து இந்த குழுவினர் கிரானைட் குவாரி பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை பூவிருந்தவல்லியை சேர்ந்த வி.அன்பழகன் சார்பில் வழக்கறிஞர்கள் ஜான்வின்சென்ட், சொக்கலிங்கம், மகேஷ்பாபு ஆகியோர் கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து மதுரை ஐகோர்ட் கிளையில் மனு த”க்கல் செய்திருந்தனர். அரசு தரப்பில் ஆஜர”ன தமிழக அரசு வழக்கறிஞர் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், கிரானைட் முறைகேடுகள் குறித்து தமிழக அரசு  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள கிரானைட் அதிபர்களின் வங்கி கணக்குகளையும், பாஸ்போர்ட்களையும் முடக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்தார். இரு தரப்பு வ”தங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கை வரும் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். முன்னதாக முறைகேடுகளில் ஈடுபட்ட பி.பழனிச்சாமி அவரது 2 மகன்கள், சிந்து கிரானைட் செல்வராஜ் உள்ளிட்ட கிரானைட் அதிபர்கள் 13 பேர் முன்ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுமீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த மனுமீதான விசvரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்