முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் உளவுத்துறை எம்.எம்.எஸ் பீதியை கிளப்புகிறது

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக, - 19 - மும்பை தாக்குதல் போல மீண்டும் ஒரு தாக்குதலை உருவாக்க பாகிஸ்தான் உளவுத்துறை எம்.எம்.எஸ், பீதியைக் கிளப்பி வருகிறது.  பெரிய தாக்குதல் ஒன்றை இந்தியாவில் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் முயன்று வருகிறார்கள். அவர்களுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை உதவி வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் மேற்கொண்ட அனைத்து தீவிரவாத முயற்சிகளையும் கடந்த சில மாதங்களாக வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. இதனால் விரக்தி அடைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் நாடெங்கும் மதக்கலவரத்தை தூண்டி வடும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இந்தியாவில் உள்ள இந்துக்களையும், முஸ்லிம்களையும் மோதவிட்டு பொருளாதாரத்தை சீர்குழைக்கும் செயலில் இறங்குமுகமாக போலி எம்.எம்.எஸ், எஸ்.எம். எஸ். தகவல்களை தயாரித்து பரப்புகிறார்கள். குஜராத் முஸ்லிம்களிடம் கலவரம் ஏற்படுத்த அவர்கள் செய்த முயற்சி பலிக்க வில்லை.  இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தை கையில்  எடுத்த பாக். உளவு அமைப்பு அதை பின்னணியாக வைத்து போலி எம்.எம்.எஸ். தயாரித்து வடகிழக்கு மாநில மக்களிடம் தாக்குதல் பீதியை ஏற்படுத்தி விட்டது.  பெங்களூரில் இப்பீதியை கிளப்புவதன் மூலம் இந்திய தகவல் நுட்பதுறையில் முடக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று திட்டமிட்டுள்ளது. 

பெங்கஏளூரில்  பறிமுதல் செய்த எம்.எம்.எஸ். காட்சிகளை ஆய்வு செய்த மத்திய உளவுத்துறையினர் இதில் ஐ.எஸ்.ஐ. யின் பின்னணி இருப்பதை கண்டு பிடித்துள்ளனர். எனவே இப்போலியான தகவல்களை யாரும் பரப்பி ஐ.எஸ்.ஐ. யின் சதிக்கு உதவிட வேண்டாம் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.  இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து ஏராளமான எஸ்.எம்.எஸ். களை அனுப்ப 15 நாட்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்