முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரங்கசாமி ஆட்சிக்கு வந்தபிறகு புதுவையில் ரவுடியிசம் பெருகிவிட்டது

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுச்சேரி, ஆக.- 19 -ரங்கசாமி ஆட்சிக்கு வந்த பிறகு புதுவையில் ரவுடியிசம் பெருகி விட்டது என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.  மத்திய அமைச்சர் நாராயணசாமி நேற்று புதுவை போலீஸ் ஜஜி ரன்வீர்சிங் கிர்ஸ்னியாவை புதுவை கம்பன் கலையரங்கில் உள்ள அவரது அலுவலகத்திற்கு அழைத்து புதுவையில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு குறித்து பேசினார். பின்னர் இது குறித்து மத்திய அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு போலீஸ் காவலில் இருந்த கைதி ஜெகனை அழைத்து சென்றபோது 20-க்கும் மேற்பட்ட ரவுடிகள் வழிமறித்து வெடிகுண்டுகள் வீசி ஜெகனை கொன்றுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பொதுமக்களிடம் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை பிடிக்காமல் தப்ப விட்டது ஆச்சரியத்தை அளிக்கிறது.  இதனை தொடர்ந்து புதுவை மையப்பகுதியிலும், குமரகுரு பள்ளத்திலும் குண்டு வீச்சு சம்பவம் தொடர்ந்துள்ளது. புதுவையில் சட்டம்-ஒழுங்கு மோசமாகி விட்டதாக பொதுமக்களில் பலர் என்னிடம் தொலைபேசியில் பேசி இது குறித்து நடவடிக்கை எடுக்கும் படி கேட்டு வருகின்றனர்.  ரங்கசாமி ஆட்சிக்கு வந்த பிறகு புதுவையில் ரவுடியிசம் பெருகி உள்ளது. தொடர் கொலை, கொள்ளை, வழிப்பறி, வீடு நிலம் அபகரிப்பு, வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. ஜெயிலில் உள்ள கைதிகள் செல்போன் மூலம் வியாபாரிகளை மிரட்டி வருகின்றனர். இது குறித்து புதுவை மாநில ஜஜியிடம் விளக்கம் கேட்டுள்ளேன். காவல்துறையை நவீனப்படுத்தவும், கூடுதல் போலீசாரை நியமிக்கவும் நிதி உதவி வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று அவரிடம் கூறியுள்ளேன். அதற்கு போலீஸ் ஜஜி இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டம்-ஒழுங்கை சரி செய்து விடுவதாக கூறியுள்ளார். ரங்கசாமி ஆட்சிக்கு வந்த பிறகு புதுவை ரவுடிகளின் ராஜ்ஜியமாக மாறிவிட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 24 ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ரங்கசாமியிடம் கோப்பு அனுப்பப்பட்டது. ஆனால் ரவுடிகளில் பாதிபேர் அவருடைய தொகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த கோப்புக்கு அவர் ஒப்புதல் அளிக்கவில்லை. மேலும் அந்த ரவுடிகளுக்கு நேர்முகமாகவும், மறைமுமாகவும் ரங்கசாமியின் ஆசி உள்ளது. புதுவையில் தற்போது நிலவி வரும் சட்டம்-ஒழுங்கு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் போலீஸ் ஜஜியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago