முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்துறையின் தவறான செயலால் அனில்அம்பானி நிறுவனத்திற்கு ரூ.29.033 கோடி லாபமாம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. - 19 - மின்துறையின் தவறான செயலால் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்துக்கு ரூ. 29,033 கோடி லாபமும் மத்திய அரசுக்கு அதே அளவுக்கு இழப்பும் ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்குத் தணிக்கைத்துறை அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார். நாட்டின் மின் உற்பத்தியை 1,00,000 மெகாவாட் அளவுக்கு அதிகரிக்க மத்திய அரசு தீட்டிய திட்டம் தான் அல்ட்ரா மெகா பவர் புராஜக்ட். இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தலா 4,000 மெகாவாட் திறன் கொண்ட நிலக்கரியால் இயங்கும் 16 மெகா மின் நிலையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இத் திட்டத்தை மத்திய மின்துறையின் பவர் பைனான்ஸ் கார்ப்பரேசன் உதவியோடு தனியார் நிறுவனங்கள் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மத்தியப் பிரதேசம் சசான் பகுதியில் ஒரு மின் நிலையத்தைக் கட்டி, இயக்கும் பணி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்குத் தேவையான நிலக்கரியை வெட்டி எடுத்துக் கொள்ள 3 சுரங்கங்களும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டன. ஆனால், இந்த சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை எடுத்து மத்தியப் பிரதேச மாநிலத்தின் சித்தராங்கி என்ற இடத்தில் உள்ள தனது மின் திட்டப் பணிக்கு ரிலையன்ஸ் பயன்படுத்தியுள்ளது. உபரியாக இருந்த நிலக்கரியை ரிலையன்ஸ் தனது வேறு திட்டத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற ஒரு விதியை, ஏலம் எல்லாம் முடிந்த பிறகு மின்துறை அமைச்சகம் சேர்த்துள்ளது. இதை வைத்து ரிலையன்ஸ் புகுந்து விளையாடியதில் நாட்டின் ரூ. 29,033 கோடி மதிப்புள்ள நிலக்கரி கொள்ளை போய்விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்