முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு ராணுவ பாதுகாப்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

சென்னை, ஆக.- 19 - வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க துணை ராணுவம் தேவை என மாநில அரசுகள் கேட்டால் வழங்க தயாராக உள்ளோம்  என்று மத்திய அமைச்சர்   நாராயணசாமி கூறியுள்ளார்  மத்திய அமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-​ அசாம் உள்பட வடகிழக்கு மாநிலங்களில் உள்ளவர்கள் இந்தியாவில் எந்த ஒரு பகுதியிலும் வசிக்கலாம். அவர்களுக்கு உரிமை உள்ளது. இது போன்ற வதந்திகளை கிளப்பி விடுபவர்கள் மீது மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கும். அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க துணை ராணுவம் தேவை என மாநில அரசுகள் கேட்டால் வழங்க தயாராக உள்ளோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உண்மை நிலவரம் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தி வந்தேன். ஆனால் nullநீதிமன்றம் தடை விதித்து உள்ளதால் கூடங்குளம் பற்றி பேச மாட்டேன். சென்னையில் தி.மு.க. நடத்திய டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மத்திய அரசுக்கு வந்து உள்ளது. இந்த தீர்மானங்கள் பற்றி பரிசிலித்து வருகிறோம்.  இலங்கையில் தமிழர்களுக்கு உரிய அதிகாரங்கள் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். மத்திய பாராளுமன்ற தணிக்கை குழு தலைவரின் அறிக்கை சரியானது அல்ல. தனது அதிகார வரம்புக்கு மீறி செயல்படுகிறார். தணிக்கை குழுவில் நிலக்கரி சுரங்கங்களை பொது ஏலத்தில் கொண்டு வரவேண்டும் என்கிறார். நிலக்கரி சுரங்கங்களை பொது ஏலத்தில் கொண்டு வராததால் இந்தியாவில் அனல் மின் நிலையங்களில் கூடுதலாக 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பொது ஏலத்தில் கொண்டு வந்தால் மின்சார கட்டணம் பலமடங்கு அதிகரிக்கும். ஒரு யூனிட் ரூ.15 என உயர்ந்துவிடும். 2003-ம் ஆண்டு பாரதீய ஜனதா அரசு எந்த கொள்கைகளை செயல்படுத்தியதோ அதன் அடிப்படையில் மத்திய அரசு செயல்படுகிறது. பாரதீய ஜனதா ஆட்சி காலத்தில் 21 சுரங்கங்களுக்கு எந்தவித நிபந்தனைகளின்றி தாராளமாக அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. நிலக்கரி சுரங்கங்களை பொது ஏலத்தில் விட பாரதீய ஜனதா கட்சிகளின் முதல்வர்கள் கூட எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மத்திய அரசுக்கு மக்கள் நலனே முக்கியம். தணிக்கை குழு தலைவரை திருப்திப்படுத்துவது மத்திய அரசின் வேலை கிடையாது. அவரது நலன் எங்களுக்கு முக்கியம் அல்ல. மக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்