முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் 1000 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கே தரவேண்டும்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக.- 20 - கூடங்குளம் முதல் பிரிவில் தயாராகும் 1000 மெகாவாட் மின்சாரம் முழுவதையும்  தமிழகத்திற்கே தரவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு மீண்டும் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். அவர் கடிதத்தில் கூறியிருப்பதாவது:- கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் முதல்பிரிவு மின் சக்தி முழுவதையும் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று கோரி நான் 2011-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி மற்றும் 2012-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி எழுதிய கடிதங்களை உங்கள் கவனத்தில் கொண்டு வர விரும்புகிறேன். என்னுடைய வேண்டுகோளுக்கு இதுவரை தங்களிடம் இருந்து பதில் வரவில்லை. அடுத்த சில நாட்களில் கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தின் முதல் பிரிவுக்கு அணு எரிபொருள் நிரப்புவது நடைபெறும் என்று எனக்கு தெரிகிறது. இந்த தருணத்தில் என்னுடைய முந்தைய கோரிக்கையை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுகுறித்து விரைவான பதிலை எதிர்பார்க்கிறேன். இந்த விஷயத்தில் என்னுடைய மாநிலத்தின் நியாயமான கோரிக்கையை நீங்கள் பாராட்டுவீர்கள். மேலும் சாதகமான பதிலை விரைவில் தெரிவிப்பீர்கள் என்று உறுதியாக  நான் நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago