முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 வழக்குகளின் தீர்ப்பு தவறானது: முன்னாள் நீதிபதிகள் ஜனாதிபதிக்கு கடிதம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஆக. - 20 - சுப்ரீம் கோர்ட்டால் வழங்கப்பட்ட 9 பேரின் மரண தண்டனை தீர்ப்புகள் தவறானவை என்று ஓய்வு பெற்ற நீதிபதிகள் 14 பேர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் அனுப்பியுள்ள விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  மனித உரிமைகளுக்காக வாதாடும் வழக்கறிஞர் மொகித் செளத்ரியின் ஒருங்கிணைப்பில் 14 ஓய்வு பெற்ற நீதிபதிகள் சுப்ரீம் கோர்ட்டின் மரண தண்டனை தீர்ப்புகளை ஆராய்ந்தது. அதன் பின்னர் 5 வழக்குகளில் 9 பேருக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பு தவறானது என்று சுட்டிக்காட்டியுள்ளது.  1980-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் அரிதான வழக்கு எது என்பதற்கு அளித்த வரையறைக்கு எதிரானதாக இந்த வழக்குகளின் தீர்ப்புகள் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் இந்த நீதிபதிகள் ஒவ்வொருவரும் தனித்தனியே கையெழுத்திட்ட கடிதத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நீதிபதிகளில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் 5 பேரும் அடக்கம்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்