முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக அழகியாக சீனப் பெண் யூ வென்ஸியா தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2012      உலகம்
Image Unavailable

 

ஆர்டோஸ் (சீனா), ஆக. - 20 - சீன அழகி யூ வென்ஸியா, மிஸ் வேர்ல்ட் 2012 போட்டியில் பட்டம் வென்றார். இந்திய அழகி வான்யா மிஸ்ரா டாப் 7 அழகிகள் பட்டியலுக்குள் மட்டுமே வர முடிந்தது. ஆனால் பட்டம் வெல்ல முடியாமல் போய் விட்டது. சீனாவின் ஆர்டோஸ் நகரில் மிஸ் வேர்ல்ட் 2012 அழகிப் போட்டி நடந்தது. இதில் இந்தியா சார்பில் மிஸ் இந்தியா வேர்ல்ட் வான்யா கலந்து கொண்டார். இந்த அழகிப் போட்டியில் சீனாவின் யூ வென்ஸியா மிஸ் வேர்ல்ட் பட்டத்தைத் தட்டிச் சென்றார். வான்யா, இறுதிச் சுற்று வரை தகுதி பெற்றார். இருப்பினும் பட்ட வாய்ப்பு நழுவிப் போய் விட்டது. இருப்பினும் வான்யாவுக்கு மிஸ் சோசியல் மீடியா, பியூட்டி வித் எ பர்பஸ் ஆகிய இரு பட்டங்கள் கிடைத்தன. வான்யா, ஜலந்தரைச் சேர்ந்தவர். அங்கு எலக்ட்ரிகல் என்ஜீனியரிங் படித்து வரும் மாணவி ஆவார். மொத்தம் 116 அழகிகள் இந்த ஆண்டுப் போட்டியில் கலந்து கொண்டனர். இதுவரை நடந்த போட்டிகளிலேயே அதிக அளவில் அழகிகள் கலந்து கொண்டது இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்