முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரானைட் அதிபர் பி.ஆர்.பி பாளை சிறையில் அடைப்பு

திங்கட்கிழமை, 20 ஆகஸ்ட் 2012      ஊழல்
Image Unavailable

 

நெல்லை,ஆக.21 - கிரானைட் முறைகேடு வழக்கில் போலீசில் சரணடைந்த பி.ஆர்.பழனிச்சாமி நேற்று அதிகாலை மதுரையிலிருந்து கொண்டு வரப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள கிரானைட் குவாரியில் ரூ.16 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளதாக முந்தைய கலெக்டர் சகாயம் அறிக்கை அளித்தார். அதன் பேரில் தற்போதைய கலெக்டர் அன்சுல்மிஸ்ரா உத்தரவின் பேரில் 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழுவினர் கடந்த 19 நாட்களாக விசாரணை மற்றும் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதுவரை பி.ஆர்.பி. நிறுவனம் மீது 4 வழக்குகள் உள்பட மொத்தம் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு பி.ஆர்.பி.நிறுவன அதிபர் பழனிச்சாமி உள்ளிட்ட கிரானைட் அதிபர்கள் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர். கிரானைட் முறைகேடு குறித்து சி.பி.ஐ.மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்தநிலையில் கடந்த 18ந் தேதி மதுரை மாவட்ட எஸ்.பி.அலுவலகத்தில் பி.ஆர்.பழனிச்சாமி சரணடைந்தார். இதையடுத்து பழனிச்சாமியை மதுரை - அழகர்கோயில் சாலையில் உள்ள அப்பன்திருப்பதி போலீஸ் நிலையத்தில் வைத்து எஸ்.பி.பாலகிருஷ்ணன், ஏ.எஸ்.பி.மயில்வாகனன் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் விடிய, விடிய விசாரணை நடத்தினர். குவாரியில் அளவுக்கு அதிகமாக கற்களை வெட்டி எடுத்து, அரசு நிலங்களில் ஆக்கிரமித்து கற்களை அள்ளியது, நீர் நிலைகளை அழித்தது, தடயங்களை மறைத்தது உள்பட 30 வகையில் விதி மீறல்கள் செய்துள்ளதாக பழனிச்சாமி மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. விசாரணையில் முறைகேட்டை கடந்த ஆட்சியில் யார், யாருக்கெல்லாம் மாமூல் கொடுக்கப்பட்டது என்பன போன்ற கேள்விகளை போலீசார் கேட்டனர். விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்களை அவர் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் போலீசார் பழனிச்சாமியை மதுரை தெற்கு தெருவில் உள்ள பி.ஆர்.பி.கிரானைட் பாலிஷ் போடும் தொழிற்சாலைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து போலீசார் பழனிச்சாமியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை ஜே.எம்.எண்.5 மேஜிஸ்திரேட் கண்ணன் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் மேஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார். மேஜிஸ்திரேட், பழனிச்சாமியை வருகிற 31ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் கிரானைட் அதிபர் பழனிச்சாமியை மதுரை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு இடம் இல்லாததால் இரவோடு இரவாக நெல்லைக்கு கொண்டு வரப்பட்டு பாளை மத்திய சிறையில்  நேற்று அதிகாலை 3.25 மணிக்கு அடைத்தனர். பாளை சிறைக்கு வந்த பழனிச்சாமி தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பாளை சிறை அதிகாரிகள் அவரை பாளை சிறைக்குள் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர். தொழில் அதிபர் பி.ஆர்.பி.பழனிச்சாமி பாளை சிறைக்கு கொண்டு வந்துள்ளதால் அவரது உறவினர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் பாளை மத்திய சிறைக்கு வெளியே காத்து நின்றனர். இதனால் மத்திய சிறை முன்பு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் கருணாசாகர் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago