முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்பட்டியில் மாணவர்கள் இருவர் அடித்து கொலை

செவ்வாய்க்கிழமை, 21 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

கோவில்பட்டி ஆக 21 - கோவில்பட்டியில் வீடியோகேம்ப் விளையாட்டால் இருமாணவர்கள் அடித்து கொலை செய்யபட்ட விபரீதசம்பவம் நடந்துள்ளது. இது குறித்து போலீஸ்தரப்பில் கூறபடுவதாவது. கோவில்பட்டி ஊரணிதெருவில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான வீடியோகேம்ப் விளையாட்டு நிறுவனம் இயங்கிவருவதாக கூறபடுகிறது. இதில் மின்சாரம் இல்லாதநேரங்களிலும் ஜெனரேட்டர் வைத்து இயக்கபடுவதால் எந்தநேரமும் மாணவ, மாணவியரின் கூட்டம் அலைமோதும் என கூறபடுகிறது. இதில் கடந்த சில தினங்களுக்கு முன் செல்வா என்ற மாணவரை விளையாடுவதில் ஏற்பட்டமோதலில் ஒரு கும்பல் அடித்து உதைத்தார்களாம் அதனால் ஆத்திரமடைந்த நிறுவன உரிமையாளரும், அப்பகுதி இளைஞர்களும் சேர்ந்து அந்த மாணவர்களை கண்டித்து அப்பகுதிக்கு இனிமேல் வரகூடாது என எச்சரித்து அனுப்பினார்களாம். இருப்பினும் நேற்று முன்தினம் இரவு 5 மாணவர்கள் மீண்டும் கேம்ப் விளையாட வந்துள்ளார்கள். அப்போது நிறுவன உரிமையாளர் மற்றும் சிலரும் சேர்ந்து மாணவர்களை தடுத்துள்ளனர் இருதரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் மாணவர்களை 9 பேர் கொண்ட கும்பல் அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த கோவில்பட்டி திருநகரை சேர்ந்த ஜெயசந்திரன் என்பவர் மகன் பாலமுருகன்(வயது-19) இவர் கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் பிஇ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இதே போல் கோவில்பட்டி மாதாங்கோவில் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரது மகன் ராமநாதன்(வயது-21) இவர் காரியாபட்டியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். இருவரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கபட்டு மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். இதில் சிகிச்சை பலனலிக்காமல்  இருவரும் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் முருகேசன் விசாரணை நடத்தி வருகிறார். கல்லுாரி மாணவர்கள் இருவர் அடித்து கொள்ளபட்ட சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக ஊரணி தெரு வீடியோகேம்ப் உரிமையாளர் காமராஜர் நாடார் என்பவரது மகன் செந்தில்குமார்(29) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 8 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago