முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை அணுமின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு

செவ்வாய்க்கிழமை, 21 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

கல்பாக்கம், ஆக.21 -   சென்னை அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 230 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவில்லை. இன்னும் 2 நாட்களில் மின் உற்பத்தி சரி செய்யப்படும் என அணுமின் நிலைய இயக்குனர் கே.ராமமூர்த்தி தெரிவித்தார்.  

காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்தில் சென்னை அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. அங்கு 2 அணு உலைகள் உள்ளன. முதல் அணு உலையில் 180 மெகாவாட் மின்சாரமும், இரண்டாவது அணு உலையில் 160 மெகாவாட் மின்சாரமும், மொத்தம் 340 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 75 சதவிகிதம், அதாவது 230 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு வினியோகிக்கப்படுகிறது. மீதமுள்ள 25 சதவிகித மின்சாரம் அதாவது 110 மெகாவாட் மின்சாரம் அண்டை மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த 19-ம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் சுவிட்ச் பார்டில் ஆர்.ஒய்.பி. மும்முனை இணைப்பில் ஆர். பிரிவில் பழுது ஏற்பட்டதால் சென்னை அணுமின் நிலையத்தில் மொத்த உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 230 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவில்லை.      

இது சம்பந்தமாக சென்னை அணுமின் நிலைய இயக்குனர் கே.ராமமூர்த்தி கூறுகையில், சென்னை அணுமின் நிலைய ஆர். பிரிவில் ஏற்பட்ட கோளாறினால் மொத்த உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுநர்களும் பழுதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், 75 சதவிகித பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், இன்னும் இரு நாட்களில், அதாவது வரும் 22-ந் தேதி முதல் அணு உலையில் மின் உற்பத்தியும், 23-ம் தேதி இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி துவங்கும் எனவும், இதன் மூலம் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 230 மெகாவாட் மின்சாரம் உடனடியாக வினியோகிக்கப்படும் என கூறினார். அப்போது தொழில்நுட்ப பணிகள் கண்காணிப்பாளர் ராசோமியாஜுலு உடன் இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்