முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. அரசை அகற்றுவதன் மூலம் நல்ல பாடத்தை தமிழகம் கற்பிக்க வேண்டும்-பிருந்தா காரத்

செவ்வாய்க்கிழமை, 5 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

சிதம்பரம்,ஏப்.- 5 - தமிழக சட்டப் பேரவை தேர்தலில் தி.மு.க. அரசை அகற்றுவது மட்டுமல்லாமல் உலகுக்கே நல்ல பாடத்தை தமிழகம் கற்பிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார். சிதம்பரம் தொகுதி கம்யூனிஸ்டு வேட்பாளர் பாலகிருஷ்ணனை ஆதரித்து சிதம்பரத்தில் பேசிய அவர் மேலும் கூறுகையில், அ.தி.மு.க.வுடனான கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி அல்ல. இந்த கூட்டணி கடந்த 5 ஆண்டுகளாக தி.மு.க. அரசு செய்து வரும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜெயலலிதா தலைமையில் 9 அரசியல் கட்சியினர் இணைந்து உருவாக்கியதாகும். மக்கள் மீது தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் இரட்டை தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு சட்டப் பேரவை தேர்தல் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இதில் தி.மு.க. அரசை அகற்றுவது மட்டுமல்லாமல் இந்தியாவுக்கே ஏன்? உலகுக்கே நல்ல பாடத்தை தமிழக மக்கள் கற்பிக்க வேண்டும். இதனால் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி மலர அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார் பிருந்தா காரத். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony