முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துருக்கி குண்டு வெடிப்பில் 8 பேர் உடல் சிதறி பலி

வியாழக்கிழமை, 23 ஆகஸ்ட் 2012      உலகம்
Image Unavailable

 

இஸ்தான்புல், ஆக. 23 - துருக்கியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 8 பேர் பலியானார்கள். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். துருக்கியின் தென் கிழக்கு பகுதியில் குர்திஷ் இன மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். எனவே இப்பகுதிக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க கோரி துருக்கி அரசுக்கு எதிராக குர்திஷ் இன மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் பி.கே.கே. என்ற குர்திஷ் பயங்கரவாதிகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள துருக்கி ராணுவ வீரர்களை குறி வைத்து கடந்த ஒரு வாரமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

காசியன்டெப் என்ற பகுதியில் உள்ள காவல் நிலையம் அருகில் நின்றிருந்த ஒரு கார் திடீரென வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். பயங்கரவாதிகள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். துருக்கி பிரதமர் ரிசப் தய்யிப் எர்கோகான் மற்றும் அரபு நாடுகள் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவினர் சிரியா அதிபரின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக போராட்டக்காரர்களுக்கு உதவி வரும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. குண்டு வெடிப்பு நிகழ்ந்த துருக்கியின் தென் கிழக்கு பகுதியில்தான் சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக அகதிகளாக குடியேறி ஆயிரக்கணக்கானவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago