முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆவணி மாத பூஜை நிறைவு: சபரிமலை நடை அடைப்பு

வியாழக்கிழமை, 23 ஆகஸ்ட் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

சபரிமலை, ஆக. 23 - அருள்மிகு சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைகள் நிறைவு செய்யப்பட்டு நடை அடைக்கப்பட்டது. மலையாள புத்தாண்டு மற்றும் ஆவணி மாதப் பிறப்பையொட்டி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. மலையாள புத்தாண்டில் சிம்மம் மாத அமாவாசை திதியும் வந்ததால் ஏராளமான பக்தர்கள் பம்பையில் புனித நீராடி முன்னோர்களுக்கு கர்ம காரியங்கள் செய்து பம்பை கணபதிக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். சபரிமலை மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகத்தை நிறைவு செய்தார். தந்திரி கண்டரரு ராஜீவரு, சோபன மண்டபத்தில் பூஜை நடத்தி ஐயப்பனுக்கு களபாபிஷேகம் செய்து உச்சி பூஜை வழிபாடு நடத்தினார். 

மாலையில் வழக்கமான பூஜைகளுடன் புஷ்பாபிஷேகம் படி, பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இரவு 10 மணிக்கு சுவாமி ஐயப்பனை தவம் இருக்க வைத்து, ஹிரவராசனம் பாடி மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி கோவில் நடையை அடைத்தார். 

சபரிமலை தேவஸ்தான் மற்றும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் பக்தர்களுக்கு டஅன்னதானம் வழங்கப்பட்டது. சபரிமலை வனப் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் பம்பை நதியில் அதிகளவில் தண்ணீர் வந்தது. இனி திருவோணம் பண்டிகைக்காக வரும் 27 ம் தேதி மாலை சபரிமலை கோவில் நடை திறக்கப்படும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்