முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

18-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்

செவ்வாய்க்கிழமை, 5 ஏப்ரல் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.- 5 - வரலாற்றுச் சிறப்பு மிக்க அழகர் கோவில் சித்திரை திருவிழா வரும் 14 -ம் தேதி துவங்குகிறது. அழகர் மலையில் இருந்து 16 -ம் தேதி புறப்படும் கள்ளழகர் 18 -ம் தேதி லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க காலை ஏழு மணிக்குள் வைகை ஆற்றில் இறங்குகிறார். அழகர் கோவிலில் சுந்தரராஜபெருமாள் கோவிலில் நடைபெறும் விழாக்களின் முக்கியமானது சித்திரை திருவிழா. வரலாற்றுச்சிறப்பு மிக்க இத்திருவிழா வரும் 14 -ம் தேதி துவங்குகிறது. 16-ம் தேதி கள்ளழகர் திருக்கோலத்தில், தங்கப்பலக்கில் புறப்படுகிறார் சுந்தரராஜ பெருமாள். அன்று இரவு முழுவதும பக்தர்கள் அமைத்திருக்கும் மண்டகபடிகளில் எழுந்தருளுகிறார். மறுநாள் காலை ஆறு மணிக்கு மூன்றுமாவடி வரும் கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது. காலை ஒன்பது மணிக்கு புதூரிலும், மாலை ஆறு மணிக்கு அவுட் போஸ்டிலும் எதிர்சேவை நடக்கிறது. அன்று இரவு 12 மணிக்கு தல்லாகுளம் பெருமாள் கோயிலை சென்றடையும் கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. 18 -ம் தேதி அதிகாலை இரண்டு மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை ஏற்றுக்கொண்டு தங்க குதிரை வாகனத்தில் புறப்படும் கள்ளழகர் தல்லாகுளத்தில் உள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். பின் பக்தர்களின் திருக்கண் மண்டக  படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று காலை 6.45 மணிக்கு மேல் ஏழு மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்ச்சியை காண மதுரை மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வைகையில் திரள்வர். பகலில் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரியும், இரவு வண்டியூர் பெருமாள் கோவிலில் திருமஞ்சனமும் நடக்கிறது. மறுநாள் காலை அங்கிருந்து புறப்படும் கள்ளழகர் வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். அன்று இரவு ராமராயர்  மண்டபத்தில்எழுந்தருளுகிறார். அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சியும், மறுநாள் பூப்பல்லக்கும் நடக்கிறது.  வரும் 21 -ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் கள்ளழகர், 22 -ம் தேதி அழகர் மலை சென்றடைகிறார். இதன் முதல் நிகழ்ச்சியான கொட்டகை முகூர்த்த விழா நேற்றுமுன்காலை தல்லாகுளம் பெருமாள் கோயிலிலும், மாலை வண்டியூரிலும் நடந்தது. காலையில் நடந்த விழாவில் அழகர் எழுந்தருளும் ஆயிரம் பொன் சப்பரத்தின் யாழி பூஜிக்கப்பட்டது. பின் கோவிலில் பந்தல் அமைப்பதற்கான பந்தல்கால் பூஜிக்கப்பட்டு, கோவில் முன்வைத்தனர். பக்தர்கள் மண்பகபடிகள் அமைப்பது வழக்கம். இந்த ஆண்டு 397 திருக்கண் மண்டக படிகளில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago