முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டுமான தொழிலாளர்களுக்கு வாரியம் அமைத்தவர் முதல்வர்

சனிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஆக.25 - கட்டுமான தொழிலாளர்களுக்கு முதன்முதலில் வாரியம் அமைத்தது முதல்வர் ஜெயலலிதா என்று அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பெ.ரவீந்திரன்  தலைமையில் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில்  நடைபெற்ற தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களின் உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 880 நபர்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மற்றும் ம கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில்  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.தா.செல்லப்பாண்டியன் பேசும்பொழுது தெரிவித்ததாவது:

அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன் கருதி 1982ம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் உடல் உழைப்பு தொழிலாளர்கள் பணி நிலைமைகள் என்ற தனிச்சட்டம் இயற்றப்பட்டது.  அதனைத் தொடர்ந்து 1994ம் ஆண்டு  தமிழக முதலமைச்சர் அம்மா  முதன் முதலில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் என்ற அமைப்பை உருவாக்கினார்.  அதன் பின்னரே இந்த நல வாரியத்தின் கீழ் 69 வகையான தொழில் இனங்களில் ்ஈடுபடும் தொழிலாளர்களுக்கு உதவிட 17 தொழிலாளர் நல வாரியங்கள் இயங்கி வருகின்றன.  தமிழக முதலமைச்சர்  ஆட்சிக்கு வரும்பொழுதெல்லாம் இந்த தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, விபத்து, ஊனம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள்.  

   தமிழக முதலமைச்சர்  ஆட்சி பொறுப்பேற்ற இந்த ஓராண்டு காலத்தில் மட்டும் 4,54,364 பேர் பதிவு செய்யப்பட்டு, 5,18,103 பயனாளிகளுக்கு 116 கோடி ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.  மதுரை மாவட்டத்தில் மட்டும் 28,625 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 94 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.  அதன் தொடர்ச்சியாக இன்று 880 பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் உதவித்தொகையாக ரூ.50 இலட்சம் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்படவிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  

   தமிழக முதலமைச்சரின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் வெளிப்படையாக வழங்குவதை உறுதி செய்யும் வகையில் இருப்பில்லா வங்கிக்கணக்கு உருவாக்கி வங்கிகள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்க ஆணையிட்டுள்ளார்கள்.  இதன் மூலம் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள் வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் உடன் வங்கி கணக்குகள் தொடங்கலாம் என்ற உயரிய நோக்கத்தில் இத்திட்டத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்