முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுலாத்துறை வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் ஆய்வு

சனிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.25 - தமிழக முதல்வர் ஆணைப்படி, நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா சுற்றுலாத்துறையில் தற்போது நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் மற்றும் சுற்றுலாவினை மேம்படுத்துவதற்காக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை, இந்துசமய அறிநிலையத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் ரூ.111.20 கோடி மொத்த மதிப்புள்ள 56 திட்டப் பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. சுற்றுலா வளர்ச்சிக்காக இதர துறையினரால் மேற்கொள்ளப்படும் பணிகளை தரமானதாகவும், விரைந்து முடிக்கவும், திட்ட செயலாக்க அலுவலர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும் மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் நடைபெறும் சுற்றுலா பணிகளுக்கு முன்னுரிமை அளித்து தமிழக முதல்வரின் எண்ணப்படி உலகளவில் தமிழகத்தை சிறந்த சுற்றுலா தளமாக உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை அரசு முதன்மை செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா, அரசு செயலாளர் நெடுஞ்சாலைத்துறை டி.கே.ராமச்சந்திரன், அரசு செயலாளர் பொதுப்பணித்துறை சாய்குமார் மற்றும் அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்