முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காரைக்காலில் போலிமதுபான தயாரிப்பு கண்டுபிடிப்பு

சனிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

காரைக்கால், ஆக.25 - காரைக்கால் குடியிருப்பு பகுதியில் உள்ள திமுக பிரமுகர் வீட்டில் போலிமதுபான தயாரிப்பு பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சப்-கலெக்டர் முத்தம்மா வின் அதிரடி நடவடிக்கையில் இது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

காரைக்கால் கீழ்காசாக்குடி அம்மையார் நகர் ராதாகிருஷ்ணன் சாலையை அடுத்துள்ளது. இஎன்எஸ் திமுக மாநில பிரதிநிதி காரைக்கால் மாவட்டம் என்று பெயர் பலகை தாங்கிய வீட்டில் சார்பு கலெக்டர் முத்தம்மா மற்றும் கலால்துறை அதிகாரிகள் போலீ மதுபான தயாரிப்பு மூலப் பொருட்களை கண்டு பிடித்தனர். 

மேற்கண்ட இடத்தில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து தொடர்ந்து நடந்து வருவதால் இது குறித்து கலால் துறைக்கு பொறுப்பு வகிக்கும் சார்பு கலெக்டர் முத்தம்மாவுக்கு ரகசிய தகவல் வந்ததையடுத்து நேற்று நள்ளிரவு நடத்திய அதிரடி சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விஸ்கி, ரம், பிராந்தி ஆகிய மதுபானங்களுக்கு தனி சுவையூட்டும் ரசாயன பவுடர்கள், எரிசாராயம் மற்றும் போலி மதுபான தயாரிப்புக்கு தேவையான பொருட்களையும் கலால் துறையினர் கைப்பற்றினர். 

இது குறித்து சார்பு கலெக்டரிடம் கேட்டபோது, தகவல் வந்ததையடுத்து இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் போலிமதுபான தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்