முக்கிய செய்திகள்

திருமங்கலத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற தி.மு.க.வினர் 2 பேர் சிக்கினர்

TMM - DMK Arrest

 

திருமங்கலம்,ஏப்.- 5 - திருமங்கலத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற 2 தி.மு.க.வினரை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ ஒரு லட்சத்தை பறிமுதல் செய்தனர். இதே போல் பேரையூர் பகுதியில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வந்த தி.மு.க.வினர் அதிகாரிகள் சோதனையிட முயன்ற போது காரில் இருந்து தப்பியோடி விட்டனர். இதையடுத்து காரை பறக்கும் படை அதிகாரிகள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட கார் தி.முக. நிர்வாகி ஒருவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. 

திருமங்கலம் சின்னசெங்குளம் பகுதியில் சிலர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயல்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பாண்டி என்பவரிடம் இருந்து ரூ 62 ஆயிரத்து 200 ம், கண்ணன் என்பவரிடம் இருந்து ரூ 34, 500 ம் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த பணம் அனைத்தையும் போலீசார் பறக்கும் படை அதிகாரி மனோகரனிடம் ஒப்படைத்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்: