முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரமக்குடி சம்பவம்: போலீஸ் அதிகாரிகளை மாற்ற வழக்கு

சனிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.25 - பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்  தொடர்பாக போலீஸ் அதிகாரிகளை மாற்ற கோரி ஐகோர்ட்டில் வழக்கு  தாக்கல் செயப்பட்டுள்ள்து. சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் புகழேந்தி  தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கு மனுவில் குறிப்பிட்டு இருப்பதாவது:​

கடந்த ஆண்டு செப்டம்பர் 11​ந்தேதி, பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சிலர் சென்றபோது கலவரம் ஏற்பட்டது.

அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 தலித் மக்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். இது மனித உரிமையை மீறிய செயலாகும். தென் மண்டல ஐ.ஜி. ராஜேஷ்தாஸ், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. சந்தீப்மிட்டல், ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வர் காளிராஜ் பரமக்குடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகிய அதிகாரிகள் சட்டம்​ஒழுங்கை முறையாக பராமரிக்காததே இந்த பிரச்சினை பெரிதாக காரணமாக அமைந்தது.

மதுரை ஐகோர்ட்டு கிளையின் உத்தரவின் பேரில், சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இமானுவேல் சேகரனின் நினைவு தினம் வருகிற 11​ந்தேதி அனுசரிக்கப்பட உள்ளது. அந்த சமயத்தில் பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் அங்கு இருந்தால், மீண்டும் பதட்டமான சூழ்நிலை ஏற்படக்கூடும்.

எனவே மேற்கண்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago