முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் தமிழக மக்களுக்கு சீரான மின்சாரம்: அமைச்சர்

சனிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.25 - தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில் தமிழகத்தில் நடைபெற்று வரும் புதிய மின் திட்டங்களில், உற்பத்தி மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது.  அவ்வாறு மின் உற்பத்தி தொடங்கப்பட்டவுடன் தமிழக மக்களுக்கு விரைவில் சீரான மின்சாரம் வழங்க முடியும் என தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் ஆர். விஸ்வநாதன்  கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை 11,500 முதல் 12,800 மெகாவாட் ஆகவும் மற்றும் தினசரி பயன்பாடு 230 முதல் 250 மில்லியன் யூனிட் ஆகவும் உள்ளது.  இந்தத் தேவையை nullர்த்தி செய்ய அனல் மின் திட்டங்கள் மூலம் 3,000 மெகாவாட், எரிவாயு மூலம் 500 மெகாவாட், காற்றாலை மூலம் 3000 மெகாவாட், மத்திய தொகுப்பு மூலம் 3,000 மெகாவாட்,  தனியார் மின் நிறுவனங்கள் மூலம் 1,180 மெகாவாட் திறனும், மற்றும் நீnullர் மின் நிலையங்கள் மூலம் மீதித் தேவைக்கும் மின் உற்பத்தி பெறப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் மின் தேவைக்கும்,  உற்பத்தி செய்யும் அளவிற்கும் இடையே 3500 மெகாவாட் அளவிற்கு மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.  இதனால் தமிழக மக்கள் மிகுந்த துயருக்கு ஆளாகியும், தொழிற்சாலைகள் நலிவடையும் நிலைமைக்கும் தள்ளப்பட்டன.

காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரம் கடந்த 19.08.2012 தேதியில் 3980 மெகாவாட் அளவாக இருந்தது. இது 23.08.2012 அன்று 299 மெகாவாட் அளவிற்கு குறைந்தது.  பருவமழை மிகக் குறைவாகவே இந்த ஆண்டு பெய்து நீnullர் நிலைகளில்  குறைவான கொள்ளளவே பெறப்பட்டுள்ளது.   மேலும் மத்திய தொகுப்பில் தேசிய மின் உற்பத்திக் கழகத்தின் ஆந்திராவில் ராமகுண்டம் மற்றும் ஒரிசாவில் தால்சர் அனல் மின் நிலையங்கள் மற்றும் அணுமின் நிலையங்களில் ஏற்பட்டுள்ள உற்பத்தி குறைபாட்டினால் 1045 மெகாவாட் அளவிற்கு தமிழ்நாட்டிற்கு மின்சாரம் குறைவாகவே கிடைக்கப் பெறுகிறது.  இருப்பினும் பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக தமிழக மக்களுக்கு மின் தேவையை குறித்த மின் கட்டுபாட்டு முறைகளின்படி nullர்த்தி செய்யப்பட்டு வந்தது.  தற்போது தென்மண்டல  தொகுப்பிற்கு மின்சாரம் வர வேண்டிய மின் தொடரில் ஏற்படும் மின்சுமை காரணமாக தமிழகம் உட்பட மற்ற தென் மாநிலங்களிலும் நிலவும் பற்றாக்குறை அதிகபட்சமாக உள்ளது.  தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதித்த வழிமுறைகளின் படியும் மற்றும் மின்சாரக் கொள்முதல் அளவிற்கும் விலைக்கும் வரம்பு விதித்ததின் காரணமாகவும் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கடுமையான நிதி நெருக்கடி காரணமாகவும் போதுமான மின்சாரம் கொள்முதல் செய்ய இயலவில்லை,  மத்திய மின்கட்டமைப்பு நிர்வாகம் கடந்த 16.08.2012 தேதி முதல்  மின்கட்டமைப்பின் அதிர்வெண் 49.50 ஹெட்ஸ் என்ற அளவிற்கு கீழ் செல்லும் நிலையில் மின் கட்டமைப்பின் இயக்க விதிமுறைகளை கடுமைப்படுத்தியுள்ளது.  தடையை மீறும் பட்சத்தில் தண்டனை முறைகளையும் கடுமைப்படுத்தியதோடு அல்லாமல் மாநிலங்களுக்கு இடையேயான மின் தொடரை தானாக துண்டிக்கும் வழிவகையும் செய்துள்ளது. ஆதலால், பெங்களூரில் உள்ள தென்மண்டல கட்டுப்பாட்டு  மையம் விதிக்கும் உத்தரவுகளை மின் கட்டமைப்பு பாதுகாப்பு விதிகளின்படி கண்டிப்பாக அனுசரிக்க வேண்டியுள்ளது.  இதனால்  மின்தடை ஏற்படுத்தப்படுவதை தவிர்க்க இயலவில்லை.    இது தென்மண்டல கட்டுபாட்டு மையம் மற்றும் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க 16.08.2012 அன்று முதல் மின் தொகுப்பு கட்டமைப்பின் பாதுகாப்பு விதிகளை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.   தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்பேரில் தமிழகத்தில் நடைபெற்று வரும் புதிய மின் திட்டங்களில், உற்பத்தி மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது.  அவ்வாறு மின் உற்பத்தி தொடங்கப்பட்டவுடன் தமிழக மக்களுக்கு விரைவில் சீரான மின்சாரம் வழங்க முடியும் என கூறிக்கொள்கிறேன்.

தற்போது மின்தடையால் ஏற்படும் சிரமங்களை களைய தமிழக அரசு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் மின் தொடராமைப்புக் கழகம் சேர்ந்து எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்