முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.ஆர்.பி.யிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை

ஞாயிற்றுக்கிழமை, 26 ஆகஸ்ட் 2012      ஊழல்
Image Unavailable

 

மேலூர்,ஆக.26 - கிரானைட் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட கிரானைட் அதிபர் பிஆர்பியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கிரானைட் கற்களை வெட்டி எடுப்பதில் ஏராளமான முறைகேடுகள் திமுக ஆட்சியில் நடந்தது குறித்து வந்த புகாரின் பேரில் கலெக்டர் அன்சுல்மிஸ்ரா 18 குழுக்களை அமைத்து ஆய்வு செய்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பிஆர்பி எக்ஸ்போர்ஸ் நிறுவன அதிபர் பி.பழனிச்சாமி உள்பட 10க்கும் மேற்பட்டகிரானைட் அதிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் கிரானைட் அதிபர் பிஆர்பி போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். பின்னர் மேலூர் இன்ஸ்பெக்டர் மாடசாமி பிஆர்பியிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என கூறி மேலூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ததின் பேரில் பிஆர்பிக்கு மூன்றரை நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டது.

   இதை தொடர்ந்து பிஆர்பியை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுரை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு மயில்வானன் தலைமையில் சிறப்பு தனிப்படை டிஎஸ்பி தங்கவேலன், மேலூர் இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் இரவு பகலாக இந்த விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.  நேற்று மாலை 6 மணி அளவில்  முறைகேடுகளில் ஈடுபட்ட பிஆர்பியின் குவாரிகளுக்கு பி.பழனிச்சாமியை போலீசார் நேரில் கொண்டு சென்று கிரானைட் கற்கள் முறைகேடாக தோண்டி எடுக்கப்பட்டதை உறுதி செய்தனர். இதே போல் கண்மாய்கள், வாய்க்கால்களில் கிரானைட் கற்களை போட்டு ஆக்கிரமித்ததையும், கிரானைட் கற்கள் தோண்டி எடுக்கப்பட்ட இடங்களில் மண்ணை போட்டு மூடி மறைத்திருப்பதையும் பிஆர்பியிடம் காட்டி விசாரணை நடத்தினர். 

   போலீஸ் காவலில் உள்ள பிஆர்பியை போலீசார் நாளை(திங்கட்கிழமை) மீண்டும் மேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்