முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. தொண்டர் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி

ஞாயிற்றுக்கிழமை, 26 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.26 - சாலை விபத்தில் உயிரிழந்த அ.தி.மு.க. தொண்டர் காளிமுத்து குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா கட்சியின் சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியம், சிந்தலப்பட்டி ஊராட்சிக் கழக செயலாளர் கே.காளிமுத்து ஒன்றியக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கழக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு வாகனம் மூலம் வீடு திரும்பும்போது ஏற்பட்ட சாலை விபத்தில் அகால மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். 

என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன் பிறப்புகள் சாலைகளில் பயணம் செய்யும்போது மிகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என்று மீண்டும் நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 

கழகத் தலைமையின் மீது மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அன்புச் சகோதரர் காளிமுத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும் அவரது குடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago