தோனி - டெண்டுல்கர், சுகோய் விமானத்தில் பறக்கின்றனர் இந்திய விமானப்படை கெளரவம்

செவ்வாய்க்கிழமை, 5 ஏப்ரல் 2011      விளையாட்டு
5sachin

 

புதுடெல்லி, ஏப். - 6 -  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான தோனியும், நட்சத்திர வீர ரான டெண்டுல்கரும், சுகோய் போர் விமானத்தில் பறக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை இந்திய விமானப் படை செய்கிறது. உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசுக ளும், பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன. ஜனாதிபதி  பிரதி பா பாட்டீல், தேனீர் விருந்து அளித்து கெளரவித்தார். 

அடுத்ததாக, இந்திய விமானப்படை தளபதி பி.வி. நாயக்,கேப்டன் தோனியையும், நட்சத்திர வீரர் டெண்டுல்கரையும் அழைத்து சுகோய் ரக போர் விமானத்தில் பறக்க வைக்க ஏற்பாடு செய்துள்ளார். 

இவர்களில் டெண்டுல்கர் ஏற்கனவே இந்திய வான் படையில் கெளர வ கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய விமானப் படை தளபதி பி. வி. நாயக்கை ,தோனியும், அவரது மனைவி சாக்ஷி யும் சந்தித்துப் பேசினார்கள். அப்போது பி.வி. நாயக் இந்த உறுதி மொழியை அளித்தார். 

இந்த சந்திப்பின் போது தோனியிடம் சில கேள்விகள் கேட்கப்பட்ட ன. அதற்கு அவர் பதில் அளித்தார். தலையை மொட்டை அடித்துக் கொண்டது ஏன் என்று கேட்கப்பட்டது. 

அதற்கு பதிலளித்த போது, என்னுடைய உலகக் கோப்பை எண்ணம் நிறைவேறியது. ஆகவே, தலைமுடியை எடுத்துக் கொண்டேன் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: