முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மநாபசுவாமி கோவில் சுரங்கப்பாதையில் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஆகஸ்ட் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருவனந்தபுரம், ஆக.26 - திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவில் சுரங்கபாதையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவிலில் பாதாள அறைகள் திறக்கப்பட்டு அங்கிருந்து பல லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்களின் மதிப்பீட்டு பணி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அங்குள்ள பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் மன்னர்களால் ஏற்படுத்தப்பட்ட பாதாள நிலவறைகள் மட்டுமின்றி சுரங்கப்பாதைகளும் நில ஆய்வாளர்களால் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

பத்மநாபசுவாமி கோவிலில் இருந்து சங்குமுகம் கடல்நோக்கி  ஒரு சுரங்கப்பாதை உள்ளது. இதைப்போல் சுவாமியின் கருவறையின் கீழ் பல அடி பள்ளத்தில் இன்னொரு சுரங்கப்பாதையும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த சுரங்கப்பாதைகளில் கேரள நிலவியல் ஆய்வாளர் டாக்டர் சந்தோஷ் கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். கோவிலுக்குள் கடல்நீர் புகுந்தால் இன்னொரு சுரங்கப்பாதை வழியாக அது வெளியேறும் வண்ணமாக அதிநுட்பமான தொழில்நுட்பத்துடன் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளதை இந்த ஆய்வுக் குழுவினர் கண்டு பிடித்துள்ளனர். மேலும் சுரங்கப்பாதைகளில் அரியவகை பொக்கிஷங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்