முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனிஅருகே காதல்திருமணம் செய்த பெண்ணை ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2012      தமிழகம்

 

தேனி,ஆக.- 26 - தேனி அருகே காதல் திருமணம் செய்த பெண்ணின் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக தேனி மாவட்ட கலெக்டரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தனர்.இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்த கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி உத்தரவிட்டார். தேனி-அல்லிநகரம் நகரசபை 2-வது வார்டு பகுதியான பொம்மையகவுண்டன்பட்டி தெற்கு புதுத்தெருவில் வசிக்கும் வெள்ளைச்சாமி என்பவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தன்னுடைய குடும்பத்தினருடன் வந்து தன்னுடைய குடும்பத்தை தான் சார்ந்த சமூகத்தினர் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: என்னுடைய பெண் சுதாவை வேறு சமுதாயத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்தோம்.இதனால் சாதி சங்கத்தினர் கூட்டம் கூட்டி எங்களை சட்டையை கழற்றி காலில் விழச்செய்து ரூ.51 ஆயிரம் அபராதமும் ,என்னுடைய சித்தப்பா மகன் கருப்பசாமிக்கு ரூ.61 ஆயிரமும் விதித்தனர்.பகிரங்கமாக அனைவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதுடன் ,எங்களது பெண்ணுடனோ,அவருடைய குடும்பத்தினருடனோ எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்றும் நிபந்தனை விதித்தனர்.இந்த நிபந்தனைக்கு நாங்கள் இணங்க மறுத்ததால் எங்களை சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி வைத்தும்,எங்கள் ஊரில் எந்த ஒரு நல்ல,கெட்ட காரியங்களிலும் கலந்து கொள்ள அனுமதிக்காமலும்,குலதெய்வ வழிபாட்டை செய்ய விடாமலும் தடுக்கின்றனர்.எங்களை சேர்ந்த 7 குடும்பங்களை எங்கள் சமுதாய நிர்வாகிகள் ஒதுக்கி வைத்துள்ளதுடன் எங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களையும் மிரட்டி வருகின்றனர்.இதே போன்று என்னுடைய சித்தப்பா மகன் கருப்பசாமி வீரபாண்டியில் நடந்த சமுதாய கூட்டத்தில் தாக்கப்பட்டார்.இது தொடர்பாக வீரபாண்டி காவல்நிலைய போலீசார்  வழக்குப்பதிவு செய்துள்ளனர்.எனவே சமுதாய நிர்வாகிகளால் எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago