முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மன்னிப்பு கோரியது ஐ.ஐ.டி.: பொய்வழக்கை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.- 27 - சென்னை கிண்டி ஐ.ஐ.டி. வளாகத்தில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் புகைப்பட கலைஞர் தாக்கப்பட்டதற்கு அந்த நிறுவனம் சனிக்கிழமை மன்னிப்பு கேட்டது. அதேவேளையில் அவர்கள் பதிவு செய்த பொய் வழக்கையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளனர்.  இதுகுறித்த விபரம் வருமாறு:- சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் எம்.டெக்., முதலாம் ஆண்டு படித்த மாணவி மெருகு மானஸா விடுதி அறையில் செவ்வாய்க் கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக அங்கு புகைப்படம் எடுக்கச்சென்ற தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமப் புகைப்பட கலைஞர் ஆல்பின் மாத்யூ, விடுதியையும், அங்கு துயரத்துடன் நின்றுகொண்டிருந்த மாணவர்களையும் புகைப்படம் எடுத்தார்.  அப்போது அங்கு வந்த காவலாளிகள் 5 பேர் மற்றும் பேராசிரியர் பிரகாஷ், எம்.மய்யா புகைப்படம் எடுக்கக் கூடாது எனவும், எடுத்த புகைப்படங்களை அழிக்கக் கோரியும் ரத்த காயம் ஏற்படும் வரை தாக்கினர்.  இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று ஆல்பினை அங்கிருந்து மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் தன்னை தாக்கியவர்கள் மீது ஆல்பின் புகார் செய்தார். அப்புகாரின் அடிப்படையில் போலீசார் பேராசிரியர் பிரகாஷ் எம்.மய்யா மற்றும் 5 காவலாளிகள் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஆல்பினை தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி பத்திரிகையாளர்கள் பெருநகர காவல் ஆணையாளர் ஜே.கே.திரிபாதியை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். ஆணையாளர் திரிபாதி 2 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக பத்திரிகையாளர்களிடம் உறுதி அளித்தார்.  இதற்கிடையே ஐ.ஐ.டி. சார்பில் தங்களது விடுதிக்குள் அடையாளம் தெரியாத பத்திரிகை புகைப்பட கலைஞர் அத்துமீறி நுழைந்து புகைப்படம் எடுத்ததாகவும், மாணவிகளை அவமதித்ததாகவும், மானபங்கம் செய்ததாகவும் புகார் செய்தனர். அப்புகாரின் அடிப்படையில் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே ஆல்பின் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்காக ஐ.ஐ.டி. காவலாளிகள் வெங்கடேஷ், பிரேம்ஆனந்த், சைமன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை ஐ.ஐ.டி. நிர்வாகத்திற்கும், பத்திரிகையாளர்களுக்கும் இடையே கூடுதல் ஆணையர் பி.தாமரைக்கண்ணன், இணை ஆணையர்கள் கே.பி.சண்முகராஜேஸ்வரன், ஆர்.எஸ்.நல்லசிவம் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் பத்திரிகையாளர்களின் சில கோரிக்கைகளின் மீது உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி ஐ.ஐ.டி. பதிவாளர் சிவபிரசாத், டீன் (கல்வி) கே.ராமமூர்த்தி ஆகியோர் அனைத்து பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ஆல்பின் தாக்கப்பட்டதற்கு மன்னிப்பு கோரினர். பின்னர் தாங்கள் தொடர்ந்த பொய் வழக்கை திரும்பப் பெறுவதாக உறுதியளித்தனர். 

இதில் ஆல்பின் கொடுத்த புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். அதேவேளையில் ஐ.ஐ.டி. தரப்பினர் சனிக்கிழமை இரவு 8 மணி வரை தாங்கள் தொடர்ந்த பொய் வழக்கை திரும்பப்பெற வில்லை.     

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago