முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர். சமாதிமுகப்பு தோற்றம் மாற்றியமைப்பு

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக.- 28 - எம்.ஜி.ஆர். சமாதி ரூ.7 கோடியே 70 லட்சம் செலவில் புனரமைக்கப்படுகிறது. முகப்பு தோற்றமும் மாற்றியமைக்கப்படுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மாற்றுப் பாதையில் அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகத்தின் முன்னாள் முதல்​அமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில், அண்ணா சமாதிக்கு அருகில் அமைந்துள்ளது. அங்குள்ள சதுக்கத்தில் விரிந்த தாமரை இதழ்கள் போன்ற அமைப்பின் நடுவில் எம்.ஜி.ஆர். சமாதி உள்ளது. முகப்பில் இரு கரம் கூப்பி வணங்குவது போன்ற நூழைவு வாயில் இருந்தது. இதை தலைகீழாக பார்த்தால், அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் போன்ற வடிவில் இருக்கும். சமாதியின் அருகே நினைவுத் தூணும் உள்ளது. இந்த நிலையில், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். சமாதியை பார்க்க, தினமும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதை கருத்தில் கொண்டு, 2 சமாதிகளையும் புனரமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, அண்ணா சதுக்கத்தை புதுப்பிக்க ரூ.1 கோடியே 20 லட்சமும், எம்.ஜி.ஆர். சமாதியை புனரமைக்க ரூ.4 கோடியே 30 லட்சமும் ஒதுக்கப்பட்டது. மேலும், முகப்பு தோற்றத்தை மாற்றியமைத்து, சுற்றுச் சுவர் கட்ட ரூ.3 கோடியே 40 லட்சம் ஒதுக்கப்பட்டது. 2 சமாதிகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.8 கோடியே 90 லட்சம் ஒதுக்கப்பட்டு, பொதுப்பணித்துறை அந்தப் பணிகளை கவனித்து வருகிறது. தற்போது, முதற்கட்டமாக எம்.ஜி.ஆர். சமாதி புனரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. முகப்பு தோற்றம் மாற்றியமைக்கப்படுவதால், அந்தப் பகுதி முழுவதும் மறைக்கப்பட்டு, பாதையும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மாற்று பாதை வழியாக அனுமதிக்கப்படுகின்றனர். எம்.ஜி.ஆர். சமாதியின் உள்புறத்தில் உள்ள தரைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கற்களும் பெயர்த்து எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல், புல் தரைகளும் அகற்றப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் முடிந்த பின்னரே, இப்பகுதியில் புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ``பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும்'' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago