முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

260 மனுக்கள் மீதுஉடனடி நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் கலெக்டர் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

ராமநாதபுரம் ஆக - 28 -  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட நந்தகுமார்,  தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெறப்பட்ட 260 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார் ராமநாதபுத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 260 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்கள் முதல்வர் அவர்களின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் மருத்துவ உதவி வேண்டுதல், முதியோர் உதவித்தொகை, பசுமைவீடுகள் திட்டத்தின்கீழ் கான்கிரீட்வீடு கோருதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டாமாறுதல், காவல்துறை தொடர்பான மனுக்கள், இலவச தையல் இயந்திரம் கோருதல், ஆக்கிரமிப்புகள் அகற்றக் கோருதல் விதவைப் பெண்கள் உதவித்தொகை, வங்கிக்கடன், கல்விக்கடன் கோருதல், போன்றவை குறித்து மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பிரித்துக் கொடுத்து 15 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு பதிலளிக்குமாறு தெரிவித்தார். தமிழக முதல்வர் அவர்களின் தனிப்பிரிவு மனுக்கள்மீதும், மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெறப்பட்ட மனுக்கள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டு, காலதாமதமின்றி அந்த அந்த வாரங்களில் வரும் மனுக்கள்மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரர்களுக்கு உரிய காலத்தில் பதிலளிக்குமாறு துறை அலுவலர்களை மாவட்ட கலெக்டர்; அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில்;மாவட்ட வருவாய் அலுவலர்(பொ)திரு.சுகுமார் மற்றும் அரசு அலுவலர்கள்;  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்