முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் விளையாட்டில் ஊழல் டெல்லியில் 20 இடங்களில் சி.பி.ஐ.அதிரடி சோதனை

புதன்கிழமை, 6 ஏப்ரல் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.- 6 - காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தியதில் நடந்துள்ள ஊழல்கள் குறித்த விசாரணையை தீவிரப்படுத்தும் வகையில் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள 20 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று திடீரென்று சோதனை நடத்தினர்.  டெல்லியில் கடந்த அக்டோபர் மாதம் காமன்வெல்த் அமைப்பில் உள்ள நாடுகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டிகளை நடத்துவதில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பது தெரியவந்தது. இந்த ஊழலை முதலில் வெளிக்கொண்டு வந்தவர் தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் அய்யர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணையை தீவிரப்படுத்தும் வகையில் டெல்லி மற்றும் நொய்டா பகுதியில் உள்ள 20 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் ஒர்க்ஸ் லிமிடெட், டெல்லி வளர்ச்சி ஆணையம், மத்திய பொதுப்பணித்துறையை சேர்ந்த சில முக்கிய அதிகாரிகளின் அலுவலகங்கள், வீடுகளில் இந்த சோதனை நடைபெற்றது. இந்த நிறுவனங்கள் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கும் மைதானங்கள் அமைப்பதற்கும் சில கூடாரங்கள் அமைப்பதற்கும் தளவாட சாமான்களை சப்ளை செய்துள்ளன. இதில் அதிக விலை கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தளவாட சாமான்கள் தரமில்லாமல் இருந்தது என்றும் கூறப்படுகிறது. இந்த ஊழல் தொடர்பாக காமன்வெல்த் போட்டி அமைப்பு தலைவராக இருந்து சுரேஷ் கல்மாடி ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சில அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விளையாட்டு போட்டியையொட்டி தலைநகர் டெல்லியை அழகு படுத்துவதிலும் லண்டனில் இருந்து ஜோதி கொண்டு வருவதிலும் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!