முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை ராணுவ அதிகாரிகளை உடனே திருப்பி அனுப்பவேண்டும்

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக.- 29 - தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்தியாவில் பயிற்சி பெறும் இலங்கை ராணுவ அதிகாரிகளை உடனே திருப்பி அனுப்ப வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு வலியுறுத்தி கூறியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தின் விபரம் வருமாறு:- நான் உங்களுக்கு 25.8.12 தேதியன்று, தமிழ்நாடு வெலிங்டனில் பாதுகாப்பு சேவைகள் அலுவலர் கல்லூரியில் 2 இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அவர்களை இலங்கைக்கு திரும்ப அனுப்ப வேண்டும் என்றும் நான் தொடர்ந்து வலியுறுத்தியிருப்பதை நீங்கள் அறிவீர்கள். என் வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக இலங்கை ஒரு நட்பு நாடு, ஆகையினால் ராணுவ பயிற்சி தொடரும் என்று இந்திய அரசு அறிவித்ததை அறிந்து நான் வியப்பு அடைகிறேன். இது என்னுடைய அரசு மற்றும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக ஏமாற்றும் செயலாகும். இத்தகைய கண்டனத்திற்குரிய நோக்கத்தை இந்திய அரசு கைவிட வேண்டும் என்றும், இலங்கை ராணுவ அதிகாரிகளை திருப்பி அனுப்புவது மூலம் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மிகுந்த மதிப்பும், அக்கறையும் காட்ட வேண்டும் என்றும் நான் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கடிதத்தில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்